ஜூலை 18, 2013

குறளின் குரல் - 456


18th July 2013

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
                      (குறள் 449: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)

Transliteration:
mudhalilArkku Udhiya millai madhalaiyanj
sArbilArk killai nilai

mudhalilArkku – without the investment of money and the effort/labor
Udhiyamillai – there is no way to make an earning for living
Madhalaiyanj – the support line and the strong pillar (the virtous, knowledgeable elders)
sArbilArkk(u) – without such leaning
illai nilai – there is no rule that can sustain

Without the support and leaning of the virtuous, knowledgeable elder who are the pillars of support, a rule cannot sustain and stay in power. This is like how, without an investment, one cannot earn a living. The investment referred to her is both money and labor/effort. Without them one cannot make an earning. Likewise, without the guidance, which is the pillar of support from the wise elders a ruler cannot sustain his rule.

“Like there is no earning without the investment of kind and effort
No sustenance of a rule without the guidance elderly and wise sort”

தமிழிலே:
முதலிலார்க்கு - பொருளையோ, அதோடு கூடிய உழைப்பையோ மூலதனம் செய்யாமல்
ஊதியமில்லை - ஒருவர்க்கு பொருள் ஈட்டுவதோ, வருவாயோ கிடையாது
மதலையாஞ் - பற்றுக்கோடு, அல்லது தூணாம் (அறிவும் அறமும் இணைந்த பெரியோர்)
சார்பிலார்க்(கு) - துணையில்லார்க்கு
இல்லை நிலை - அவர்களுக்கு நிலைப்பேறாய் அரசாட்சி இராது.

பெரியோர் துணையை பற்றிக்கொள்ளும் பற்றுக்கோடாகவும், தாங்கும் தூணாகவும் சொல்லி, அது இல்லையெனில் ஒரு அரசைத் நிலைபெறத் தாங்கிப்பிடிக்க ஒன்றுமில்லை என்கிறது இக்குறள். அது எங்கனமெனில், மூலதனம் இல்லையென்றால் ஒருவருக்கு பொருள் ஈட்டும் வழியொன்றும் கிடையாது. மூலதனம் என்பது, பொருள் மட்டுமல்ல, உழைப்பும் கூடத்தான். இவை இல்லையென்றால் ஒருவருக்கு வருவாய்க்கு வழியேதுமில்லை. அதே போன்றுதான் பெரியோர் துணையில்லையெனில், ஆள்வோர்க்கு நிலையான ஆட்சி கிடைப்பதும்.

இன்றெனது குறள்:

ஈட்டலிலை மூலதனம் இல்லெனில் தாங்குமான்றோர்
கூட்டமின்றி இல்லை அரசு

ITTalillai mUladhanam illenil thAngumAnROr
kUTTaminRi illai arasu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...