17th July 2013
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
(குறள் 448: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)
Transliteration:
iDippArai
illAdha EmarA mannan
keDuppA
rilAnung keDum
iDippArai – wise and scholarly that can admonish/censure when they see wrong
illAdha – when not surrounded by such
EmarA - protectionless
Mannan - ruler
keDuppArilAnung – though none to ruin them with enmity
keDum – will on their own
This
verse expresses the consequences of not having the scholarly edlers surrounding
self for a ruler. When there is no wise and scholarly elders around a ruler
that can censure or admonish when wrong is done, then there is no need to have
enemies separately. The ruler will fall and perish on his own follies. – this
is the gist of this verse.
“No adversary needed,
for a ruler that has not
Surrounded self with wise and scholarly, to
rot”
தமிழிலே:
இடிப்பாரை - தம்மை தக்க சமயத்தில் கண்டித்துச்
சொல்லித் திருத்தக்கூடிய அறவழிப் பெரியோர்
இல்லாத - தம்மைச் சூழ வைத்திராத
ஏமரா - காவலற்ற (மேற்சொன்னவர் காவலரண் போன்றவராதலால்)
மன்னன் - ஆள்பவர்
கெடுப்பாரிலானுங் - அவர்களை பகையோடு கெடுப்பவர்
யாருமில்லையென்றாலும்
கெடும் - தாமாகவே அழிந்துபடுவர்
சென்ற குறளின் கருத்தையே மீண்டும் சொல்கிறது இக்குறள், விளைவைச்
சொல்லும் விதமாக. இடித்துரைத்து நல்லாற்றுப்படுத்தும்
பெரியோரின் துணை கோடாத ஆளுவோர், அவருக்கு முடிக்கும் பகையில்லை என்றாலும் தாமாகவே கெடுவர்
என்று சொல்கிறார் இக்குறளின் வழியாக.. கம்பர் நிந்தனைப் படலத்தில், “இடிக்குநர் இல்லை நீயே யெண்ணிய தெண்ணி யுன்னை
முடிக்கின்ற போது முன்னின் முடிவன்றி முடிவதுண்டோ” என்கிறார்.
இன்றெனது குறள்(கள்):
கெடுவர் இடித்துணர்த்த ஆன்றோர்கள் சூழார்
கெடுப்போர்
இலையெனி னும்
keDuvar
iDiththuNarththa AnRorgaL sUzhAr
keDuppOr
ilaiyeni num
இடித்துரைப்போர்
இல்லாத ஆள்வோர் கெடுவர்
முடிக்கும்
பகையின்றி யும்
iDiththuraippOr illAdha ALvOr keDuvar
muDikkum pagaiyinRi yum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam