16th July 2013
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
(குறள் 447: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)
Transliteration:
iDikkum
thuNaiyArai yALvArai yArE
keDukkum
thagaimai yavar
iDikkum – rebuking admonishing
thuNaiyArai – keeping wise and elderly as the best companions
yALvArai- that rule
yArE- who will
keDukkum – to ruin
thagaimaiyavar – have the capacity (to ruin)
This verse asks as a question, the same thought
explored in the previous verse. Who can be the enemies of the rulers that rule
with wise and elderly that can admonish for the right things and at the right
time and lead the ruler in the right path, in their fold? The answer is
obviously, “there is none”. A
Whem
there is wise and elderly that can admonish the ruler
Who
can think of having the capacity to ruin and be a spoiler?
தமிழிலே:
இடிக்குந் - இடித்து உரைத்து உணர்த்துகின்ற
துணையாரை - துணையாம் ஆன்றோரை தமக்கு சிறந்த துணையாகக் கொண்டு
ஆள்வாரை - ஆட்சி புரிவோரை
யாரே - யார்தான்
கெடுக்குந் - கெடுக்கக் கூடிய
தகைமையவர் - சிறப்பினை உடைய பகைவரெவர்
யார்?
சென்ற குறள் சொன்னதைச் சற்று மாற்றி
கேள்வியாகக் கேட்கிறது இக்குறள். ஆள்வோரை இடித்து உரைக்க வேண்டுவனவற்றிர்க்கு, உரிய
நேரத்தில் அஞ்சாமல் இடித்துறைத்து நல்லாற்றுப் படுத்தும் ஆன்றோரை, பெரியோரைத் துணைகொண்டு
ஆள்வோரை, கெடுக்கக்கூடிய சிறப்பு மிக்க பகைவர்கள் யார்? ஒருவரும் இல்லை என்கிற பதிலை
உறுதியாக அடக்கிய கேள்வி இது.
இன்றெனது குறள்(கள்):
சுட்டித் திருத்த பெரியோர் துணையிருப்பின்
ஒட்டி வருமோ பகை?
Chuttith thiruththap periyOr thuNaiyiruppin
Otti varumO pagai?
சுட்டித் திருத்திட ஆன்றோர்கள் சூழ்ந்திருந்தால்
எட்டுமோ ஆள்வோர்க்குக் கேடு?
Chuttith thiruththuDa AnDROrgaL sUzhndhirundhAl
eTTumO AlvoRkkuk kEDu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam