2nd Jun 2013
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
(குறள் 403: கல்வி அதிகாரம்)
Transliteration:
kallA dhavarum naninallar kaRRArmun
sollAdhirukkap peRin
kallAdhavarum – Even the uneducated nitwits
nani nallar – are very good people
kaRRArmun – if before the learned assembly
sollAdhirukkap – knowing the place, if keeps quiet
peRin – capable of being so.
if they learn to keep
quiet without exposing their ignorance before the assembly of learned, even the
uneducated people will be considered worthy of being in that assembly. Knowing
the right place to open mouth to say anything is the height of evolved
intelligence and if an uneducated has it naturally then it is highly
commendable.
The above three verse
emphasize that uneducated are better off not opening their mouth in the company
of scholars.
“If uneducated learn not to expose themselves by talking,
with restraint,
In the company of
schloars they’re considered worthy of being present”
தமிழிலே:
கல்லாதவரும் - கல்வி கற்காத மூடரும்
நனி நல்லர் - மிகவும் நல்லவர்தான்
கற்றார்முன் - கற்றறிந்த அறிஞர்கள் முன்னிலையில்
சொல்லாதிருக்கப் - இடமறிந்து பேசாமால் இருக்கப்
பெறின் - பெறுவாரானால்
எளிய குறள், கல்லாதவர்கள் பின்பற்றவேண்டிய நெறி பற்றி. கல்லாதவர்களும் மிகவும்
நல்லவர்களே. எப்போது? படித்த அறிவாளிகளின்
கூட்டத்திலே இருக்க நேரிடும்போது, தாங்கள் இருக்கும் இடமறிந்து வாய்மூடி மௌனிகளாக இருப்பார்களானால்!
அதுவே கல்லாதவர்களை மிக்க நல்லவர்களாக, கற்றோர் அவையில் இருக்கத் தக்கவராகவும் காட்டவல்லது.
பொதுவாக இடமறிந்து பேசுவதும், தேவைப்படும்போது, பேசாமல் இருப்பதும் அறிவாளிகளுக்கும்,
மௌனத்தின் வலிமை அறிந்தவர்களுக்கும் மட்டுமே. கல்லாதவர்களுக்கு இயலாதது.
இவ்வதிகாரத்தின் முதல் மூன்று குறளும் கல்லாமையின் இழிவுபற்றி சொல்கின்றவை. கல்லாதவர்கள்
தங்கள் அறியாமையை கற்றோர் அவைதனில் வெளிப்படுத்தகூடாதென்பதையும் சுட்டுகின்றன.
இன்றெனது குறள்:
கற்றவர்முன் கல்லாத மூடரும் பேச்சது
அற்றிடின் நல்லோரே யாம்
kaRRavarmun kallAdha mUDarum pEchchadhu
aRRiDin nallOrE yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam