1st Jun 2013
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
(குறள் 402: கல்வி அதிகாரம்)
Transliteration:
kallAdhAn
soRkA muRudhal mulaiyiraNDum
illAdhAL
peNkAmuR RaRRu
kallAdhAn – without any knowledge gained by education
soR -pEsuvadhaRku
kAmuRudhal – Asaip paDudhal
mulaiyiraNDum – the two breasts
illAdhAL – without them
peN – woman-hood
kAmuRRaRRu – a girl wishing to (enjoy woman-hood)
Form sangam age poetry
to today, private parts of female gender, especially the breasts have been
objects of elaborate description, examples to make a point. This must be
typically from the male-centric, male-dominated fraternity of poets. Mostly
woment poets have not written such things either about their own parts or in
counter referring to private parts of a male.
The thought expressed
is about the uneducated wanting to speak before the assembly of scholars. This
has been already explained in the previous verse with a different example of
dice play. Was this verse composed for people that would not understand that?
Bharathiyar wrote with pride, “valimai sErppadhu thAi mulaip pAlaDA” –
gloryfing the breast milk of a mother that nurtures every child born in this
world and is probably the first food for every soul born in this world.
To quote or describe as
an object of enjoyment is typically male centric viewpoint always. If there was
no bias they could have written, “A person of male organ without being masculine”.
Regardless, the verse
says thus: “ An uneducated desiring to speak before the assembly of scholars is
like a girl without breasts desiring to enjoy the woman-hood”.
InnA nARpadhu, another
sangam period work, uses the same example, “innA mulaiyilAL peNmai
vizhaivu” from the pain perspective.. At
least here there is a sympathetic string in expression
“For uneducated, to desire to speak before the assembly of
learned
Is like a girl without her two breasts desiring the life of
womanhood”
கல்லாதான் - கல்வி கற்காத ஒருவன்
சொற் - (கற்றோர் அவைதனில்) பேசுதற்கு
காமுறுதல் - ஆசையுறுதல்
முலையிரண்டும் - மார்பகங்கள் இரண்டும்
இல்லாதாள் - இல்லாத ஒருத்தி
பெண் - பெண்மையை
காமுற்றற்று - விரும்புவது போலாம்
சங்ககாலந்தொட்டும் இன்றுவரை
பெண்ணின் மார்பகங்களை வருணிக்காத, மேற்கோளாகக் காட்டாத புலவர்களே இல்லை என்று தோன்றுகிறது,
இது ஒரு ஆணியக்கக் கருத்தாக ஆண்புலவர்களால் மட்டுமே கையாளப்பட்டு வந்திருக்கிறது பெரும்பாலும்.
பெண்கவிஞர்கள் இவ்வாறு எழுதியதில்லை என்றே கூறலாம்.
சொல்லும் கருத்து கல்லாதவர்கள்
கற்றோர் அவையிலே பேச விழைவதைப்பற்றி. அதற்கு முந்தைய குறளில் சொல்லப்பட்டது சொக்கட்டான்
ஆடுகளத்தை வைத்து. அது புரியாதவர்களுக்கு இதுவாவது புரியட்டும் என்றா என்று தெரியவில்லை. “வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா” என்று அன்னையின்
மார்பகங்களைப் பற்றி உயர்வாகச் சொன்ன கவிஞர்களும் உண்டு. அதை ஆண்களின் போகப் பொருளாக
உதாரணம் காட்டுவது, ஓர் ஆணியக்கக் கருத்தாகத்தான் கொள்ளப்படவேண்டும். அப்படி இனப்பாகுபடில்லாமலிருந்தால்,
“ஆண்மையில்லான் கொண்ட ஆண்குறி” போன்று என்றும் எழுதலாமே.
எது எப்படியாயினும், இக்குறள்
சொல்வது இதுதான். கல்லாத ஒருவன் கற்றவர் அவையிலே பேச விழைவது, தன்னுடைய மார்பகங்கள்
இரண்டும் இயற்கையிலேயே இல்லாத ஒருத்தி, பெண்மைக்கு விழைவதைப் போலாம்.
இன்னா நாற்பது, இக்குறளடியொட்டி,
“ இன்னா முலையில்லாள் பெண்மை விழைவு” என்கிறது. கருத்தை அப்படியே எடுத்துக் கையாண்ட
கவிதைகளும், கவிஞர்களும் ஏராளம்.
.
இன்றெனது குறள்:
பெண்மையற்றாள் கொள்மையல் போல்கற்றோர் கூட்டத்தின்
கண்கல்லார் சொல்கின்ற சொல்
peNmaiyaRRAL koLmaiyal pOlkaRROr kUTTaththin
kaNkallAr solginRa sol
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam