2nd May 2013
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்குத் துய்த்தல் அரிது.
(குறள் 377: ஊழ் அதிகாரம்)
Transliteration:
vaguththAn vaguththa vagaiyallAm
kODi
thoguththArkkuth thuyththal
aridhu
vaguththAn – By Godhead
vaguththa – designed destiny(for us)
vagaiyallAm – the way to live and have or not, wealth
kODi – huge wealth
thoguththArkkuth - even if amass (huge wealth)
thuyththal – to enjoy the same (wealth)
aridhu – is difficult
More
than emphasizing the power of fate, this verse reflects a popular adage, “avananRi
Or aNuvum asaiyAdhu” (without Him, the Omniscient, not even an atom will
move – may be sub-atomic particles these days!). Without His will and
design of destiny for us, even if we amass huge wealth, it is impossible to
enjoy the fruits of it for us.
This
verse is contradicting the very nature of fate and destiny. Godhead does not
decide our destiny. Our own past deeds do. Godhead is compassionate and wants
only good things for people. But our fate does. If we give a form of a person
to fate, then this verse makes sense as it is.
“But
for the will and design of destiny of God head
Impossible to enjoy even if huge wealth
amassed
தமிழிலே:
வகுத்தான்
- உயர்பொருளாய இறைப்பொருளாயவன்
வகுத்த - நமக்கு விதித்த
வகையல்லால் - விதியின்படி அல்லாமல்
கோடி - பெரும் பொருளைத் (கோடி
என்பது பெரிய அளவையைக் காட்டுவது)
தொகுத்தார்க்குத் - சேர்த்துக்கொண்டவர்க்கு
துய்த்தல் - அதை நுகருதல் என்பது
அரிது - மிகவும் கடினம்
இக்குறள் ஊழின் வலிமையைச் சொல்வதைவிட, “அவனன்றி ஓர் அணுவும்
அசையாது” என்று இறைப்பொருளின் வல்லமையையே சொல்வதாகத் தெரிகிறது. உயர்பொருளாய இறைவன்
நமக்கு விதித்த வழியல்லாமல், நாம் பெரும்பொருளைச் சேர்த்தாலும், அதை நுகருவது கடினமாகும்.
இக்குறள் விதி என்பதையே மறுக்கிறார்போன்ற ஒரு தோற்றத்தைத்
தருகிறது. கடவுள் நம் விதியை முடிவு செய்பவரானால்,
நாம் செய்யும் நன்மை தீமைகளை அவரே முடிவு செய்வதாகக் கொள்ளலாம். கடவுள் என்னும் கருப்பொருள் கருணையின் வடிவமாகத்தான் உணர்ந்தவர்கள் கூறுவர்.
நம்விதியை நல்வழியாற்றுப் படுத்தலே கடவுள் செய்யும் செயலாக இருக்கவேண்டும். ஊழுக்கு
ஓர் உருவம் கொடுத்து அதை வகுத்தான் என்று சொன்னால் கட்டாயம் இக்குறளின் கருத்து பொருந்திவரும்.
இக்கருத்தையே
நாலடியார் பாடல் இவ்வாறு கூறுகிறது.
“வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை
அளந்தன போகம் அவரவராற்றான்”
சீவக சிந்தாமணிப்பாடலொன்று
உழை மையமாகக்கொண்டு இக்குறள் கருத்தை பின்வருமாறு கூறுகிறது.
“அளந்துதாங்கொண்டு காத்த அருந்தவமுடைய
நீரார்க்களந்தன போகமெல்லாம் அவரவர்கற்றை நாளே அளந்தன வாழும் நாளும்”
இன்றெனது குறள்:
தந்தவத் தந்தையெந்தை தானினைந்தால் தானவன்
தந்தசெல்வம் தங்கும் தனக்கு
படிக்கும்போது, தந்த அத்தந்தை எந்தை தான் நினைந்தால்தான் அவன் தந்த செல்வம்
தங்கும் தனக்கு என்று படிக்கவும்.
thandhavath thandhaiyendhai thAninaindhAl
thAnavan
thandhaselvam thangum thanakku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam