1st May 2013
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
(குறள் 376: ஊழ் அதிகாரம்)
Transliteration:
Pariyinum – even if laboriously protected
AgAvAm – it will not stay (wealth)
pAlalla – what does not belong to as decided by fate
uyththuch – Even if will to throw away (wasting what is in
possession)
Choriyinum – and throw completely
pOgA – wont leave
thama what belongs to someone.
This verse
describes the play of fate. Wealth that is not bound to stay with somebody will
not stay and perish. Similarly, even if somebody throws away all that he has
with an intention of not wanting, if the fate wills otherwise, the wealth will
be his. Both stress the power of fate and how that operates beyond the realms
of human mind and efforts.
Effort
pays off is the most common and popular belief; but with this verse presenting
such a strong case for fate and its power, we are left to wonder if “effort alone
will pay off!”
There
are quite a few poems cited in kI.vA.ja’s research edition of ThirukkuraL for
both aspects of fate individually and collectively too. The citations are from
nAlaDiyA, pazhamozhi nAnUru and kamba rAmayaNam.
“Despite the efforts to lose,
whatever will be will be to remain
What is not meant to be will not stay even
guarded with strain”
தமிழிலே:
பரியினும் - வருந்தி காத்தாலும்
ஆகாவாம் - தம்மிடத்து நில்லாதாம்
பாலல்ல - பால்+அல்ல- தம்பால் நிற்க
ஊழில்லாதவை
உய்த்துச்
- தம்மிடம்
இருக்கவேண்டாம் என்று துடைத்து எரிந்து
சொரியினும் - வெளியே கொட்டினாலும்
(அதாவது வீணாக எரிந்தாலும்)
போகா - தம்மைவிட்டு நீங்காமல்
இருக்கும்
தம - தமக்கு என்று ஊழால் விதிக்கப்பட்ட
செல்வமானது
இக்குறளும் விதிசெய்யும் விளையாட்டைக்குறித்துதான். தம்பால்
நிலைத்திருக்க விதியில்லாத செல்வம், எவ்வளவுத்தான் வருந்திக்காத்தாலும் ஒருவரிடம் நில்லாமல்
ஒழிந்துவிடும். அதேபோல தம்மிடம் இருக்கவேண்டாம் என்று துடைத்து எரிந்து வெளியே கொட்டினாலும்,
தமக்கு என்று உரியன எவையோ அவை தம்மையே சேரும் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. இரண்டுமே
ஊழின் வலிமையையும் அது மனித எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டு செயல்படுவதையும்
காட்டுகின்றன. முயற்சித் திருவினையாக்கும் என்ற வாக்கும் கூட தவறோ என்கிற எண்ணத்தை
உண்டுபண்ணுகிற கருத்திது.
ஊழென்பது பொருள் சேராமல் செய்தலுக்கும், உரியவை போகாமல் செய்தலுக்கும், நாலடியார், பழமொழி,
கம்பராமாயணப் பாடல்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டலாம். நாலடியார் பாடலொன்று, “மிடுக்குற்றுப்
பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக்கால்” என்கிறது. கம்பர் மாரீச வதைப் படலத்தில், “ தருவது விதியே
என்றால் தவம் பெரிதுடையரேனும் வருவது வருநாளன்றி வந்து கைகூடவற்றோ” என்பார். பழமொழி
நானூறு பாடல் ஒன்று, ஊழால் உரியவை போகாமையை, “வேண்டினும், வேண்டாவிடினும் உறர்பால
தீண்டாவிடுதல் அரிது” என்கிறது. இக்குறளின்
முற்றுக்கருத்தையும் சொல்லும் பழமொழிப்பாடல் ஒன்று:
“ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட! என்செய்தாங் கென்பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல்.”
கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சி உரையிலே, இக்குறளின் கருத்தையொட்டி, பல பாடல்களை
எடுத்துக்காட்டியிருந்தாலும், இங்கு மேற்கோளாகக் காட்டப்பட்டவை படிக்கும் போதே பொருள்
விளங்கக்கூடியன.
இன்றெனது குறள்:
தள்ளினாலும் தங்கும் தமக்குரிய ஊழினால்
அள்ளினாலும் அற்றதும் ஆம்
thaLLinAlum thangum thamakkuriya
UzhinAl
aLLinAlum aRRadhum Am
தமதாயின் தள்ளினும் தங்குமே தங்கா
தமதல்ல தாயதிரு தான்
thamadhAyin thaLLinum thangumE
thangA
thamadhalla dhAyathiru thAn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam