பிப்ரவரி 28, 2013

குறளின் குரல் - 321


28th February 2013

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
                       (குறள் 313:  இன்னாசெய்யாமை அதிகாரம்)

Transliteration:
seyyAmal seRRArkkum innAdha seidhapin
uyyA vizhumand tharum

seyyAmal – when a person has not done any harm to others
seRRArkkum  - if another driven by rage towards this person (and causes harm)
innAdha – harm (as reactionary reprisal)
seidhapin – if caused, that will
uyyA – untranscendable
vizhumand tharum – bring hardship

This verse is definitely meant for ascetics, renounced.  When unprovoked, someone is angered, if that anger causes a person to be enranged to cause harm, that rage will render the person in unsurupassable hardship.

Rather confusing verse in its strucure, it has given considerable hardship to earlier commentators. Most commentaries appear to be sumises of what might have been intended by vaLLuvar. Based on Parimelazhagar’s inferential interpretation, we must believe that this verse preaches extreme goodness to renounced. When someone is not angry with us, there is no reason to even think harm for that person. When someone (person1) has not done anything to bring the wrath of other person (person 2), if harm is done to that person 1 by person 2, then person 2 will end up being in unsurpassable hardship and ensuing sorrow.

mANakkuDavar, another prominent and celebrated commentator interprets this in a simple way. “Even if somebody does harm without any reason or basis, doing harm to that person should be avoided, or else it will bring unsurpassable hardship”.

Even unprovoked, if someone is angered, harm caused
 in rage’ll bring only unsurpassable harm to the enraged”

தமிழிலே:
செய்யாமல் - தாம் எந்தவித துன்பமும் ஒருவருக்குச் செய்யாதபோதும்
செற்றார்க்கும் - தம்மீது சினந்து தமக்கு வருத்தத்தைத் தருகின்றவர்களுக்கு
இன்னாத - துன்பம் (எதிர்வினையாகச்)
செய்தபின் - செய்தால் அது
உய்யா - அது தமக்கே  உய்வே இல்லாத, கடந்து செல்லமுடியாத
விழுமந் தரும் - துன்பத்தினைத் தரும்

இக்குறள் துறவிகளுக்காகவே எழுதப்பட்டது! தாம் ஒரு துன்பமும் ஒருவருக்குச் செய்யாதபோது, அவ்வொருவர் தன்மேல் சினமுற்று, அச்சினம் தமக்குத் துன்பம் கருதும்போது, பொறுக்கவியலாத சினம் வருவது இயற்கை. அதற்காக, சினந்து எதிர்வினையாக தமக்குத் துன்பம் கருதியவருக்குத் துன்பம் கருதினால், அது மீண்டும் தமக்கே கடக்கமுடியாத துன்பத்தைத் தந்துவிடும்.

ஏறக்குறைய கழுத்தைச்சுற்றி மூக்கைத்தொடும் குறளாக உள்ளது இக்குறள். துறவினருக்குத் தேவை பொறுமையும், அமைதியும். அவற்றை அவர்கள் எப்போதும் இழக்கக்கூடாது. தம்மீது சினம் இல்லாதவர்களுக்கு தீமை செய்யாதிருப்பது எல்லோர்க்குமே விதிக்கப்பட்டவொன்று.  தாமொன்றும் செய்யாமலேயே, தம்மேல் சினந்து துன்பம் விளைவிப்பவர்களுக்கும் தீமைதரும் துன்பம் விளவிக்காமல் இருப்பதே துறவிகளின் இலக்கணம். வாழ்க்கையின்பங்கள் மட்டுமல்லாது, பாவத்தில் சேர்க்கும் சினம் முதலியவற்றை அறவே துறவிகள் துறக்கவேண்டும். இந்த அடிப்படையை மீறி எதிர்வினையாற்றும் துறவினருக்கும், துறவினால் பெற்ற தவவலிமை இழந்து, அவப்பெயரும், பின்வரும் பிறவிகளிலும் கடக்கவியலாத துன்பங்களையே தரும்.

மற்றொரு போற்றப்படுகிற உரையாசிரியரான மணக்குடவர், மிகவும் எளிதாகப் பொருள் கூறுகிறார். “எவ்விதகாரணமுமில்லாமல், தமக்கு துன்பம் செய்தவருக்கும் பொல்லாங்கு செய்தலை அறவே தவிர்க்க வேண்டும்”. இல்லையெனின் அதுவே, மீளமுடியாத துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

“நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாமவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று” என்ற நாலடியார் பாடல் சொல்வதற்கு மேலான கருத்தைச் சொல்கிறது இக்குறள்.

இன்றெனது குறள்:
தன்பால் சினந்தின்னா செய்தார்க்கும் துன்புசெயின்
என்றுமுய்யா துன்பில் இடும்
thanpAl sinandhinnA seidhArkkum thunbuseyin
enRumuyyA thunbil iDum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...