32: (Not hurting
- இன்னா செய்யாமை)
[This
chapter on nor hurting or doing harm to others has two verses which are
oft-quoted by most speakers. This chapter comes after the chapter of “avoiding
wrath”. In fact previously we have also seen a chapter on “Avoiding Jealousy”.
Usually both anger and jealousy are the reasons for somebody’s anger towards
others. Since vaLLuvar has given ample reasons for avoiding both in previous
chapters, in this chapter he gives reasons for not doing harm to others, and
who will not consider harm etc,.]
26th February 2013
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(குறள்
311: இன்னாசெய்யாமை அதிகாரம்)
Transliteration:
siRappInum selvam perineum piRarkkinnA
seyyAmai mAsaRRAr kOL.
siRappInum – (sirappu + Inum)
– that which brings glorious
selvam perineum –
wealth (by being vicious and doing harm to others), even if acquired
piRarkk(u) – to others
innA seyyAmai –
not doing harm is
mAsaRRAr – blemishless
people’s
kOL – resolve
A verse similar to the first verse in the “Emphasizing
Virtue” chapter – “siRappInum selvamum Inum aRaththInungu Akkam evanO
uyirkku?” as if he has recycled the same verse in a different context with
the first part sounding exactly the same. After all, not doing harm to others
is also an important virtue and what he asked as a question, here he gives as a
resolve of blemishless people.
By doing harm to others, some may see excellent
benefits and wealth; but being selfless and not considering or doing harm to
others, for personal gains is the resolve and stance of blemishless minds. This
is the sum total of this verse. As vaLLuvar has said in a differernt verse, we
have seen earlier, “manaththukkaN mAsilan Adhal anaithtu aRan” (being
blemishless in mind is all virtue in one!), those who do not mean or do harm to
otherse are blesmishless and stick to virtuous conduct.
Even if excellence, wealth are plenty acquired, not doing harm
To others is the resolve of blesmishless minds of virtuous form”
தமிழிலே:
சிறப்பீனும் - (சிறப்பு ஈனும்) -
ஒருவருக்கு பல சிறப்புகளைக் கொடுக்ககூடிய
செல்வம் பெறினும் - செல்வங்களை (மற்றவர்களுக்கு தீயவை செய்வதால்) ஒருவர் பெற்றாலும்
பிறர்க்கு - மற்றவர்களுக்கு
இன்னா செய்யாமை - தீயன, தீங்கு செய்யாதிருத்தல்
மாசற்றார் - குற்றமில்லா பண்பினர்களின்
கோள் - கொள்கையாக, நெறியாகக் கொள்வர்.
முன்பே நாம் படித்திருக்கிற அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் முதற்குறளாம், “சிறப்பீனும்
செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு” என்ற குறளை மறுபயனாக்கம் செய்தார்போன்ற குறளிது. இன்னா செய்யாமை என்பதும் அறமாகலின்,
அங்கே கேள்வியாகக் கேட்டதை, இங்கே கொள்கையாக, உறுதிப்பாடாகச் சொல்லுகிறார்.
பிறர்க்குத் தீங்குசெய்தலால் ஒருவருக்கு சில சீர்மைதரும் விளவுகள் இருக்கலாம்.
அது பலவித செல்வங்களையும் தரலாம். இருப்பினும் பிறர்க்குத் தன்னலம் கருதாமல், துன்பம்
தரும் தீங்கினை நினையாமலிருப்பதே மாசற்ற மனத்திட்பமும், வினைத்திட்பமும் உடையவர்களது
கொள்கை, உறுதி என்கிறார் வள்ளுவர். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றும்
பிறிதொரு குறளில் சொல்லியிருப்பதால், இன்னா செய்யாதார், மாசற்றவரென்றும், அறவழி நிற்பவரென்றும்
பொருளாகிறது.
இன்று ஒரே பொருளைத்தரும்
குறள்களை இரண்டு விதமாக எழுதியுள்ளேன். ஈற்றடி ஒன்றேதான்! முதற்குறளின் பொழிப்பு
மோனை மனனம் செய்ய எளிது!)
இன்றெனது குறள்(கள்):
நீர்மை நெறியோர் நினையார்தீங் கையார்க்கும்
சீர்மைதருஞ் செல்வமுறி னும்
nIRmai neRiyOr ninaiyArthIng gaiyArkkum
sIrmaitharunj chelvamuRi num
நீர்மைநெறி போற்றுவார் தீயசெய்யார் யாவர்க்கும்
சீர்மைதருஞ் செல்வமுறி னும்
nIRmai neRipORRuvAr thIyaseyyAr yAvarkkum
sIrmaitharunj chelvamuRi num
(நீர்மை - மாசற்றல், குற்றமின்மை; சீர்மை - சிறப்பு,
உயர்வு; செல்வமுறினும் - செல்வம் உறினும் -> செல்வம் பெற்றாலும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam