7th
February, 2013
பொய்ம்மையும் வாய்மை யிடத்த
புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
(குறள்
292: வாய்மை அதிகாரம்)
Transliteration:
Poimmaiyum vAymayiDaththa puraithIrndha
Nanmai payakkum enin
Poimmaiyum – Even the
falsehood
vAymayiDaththa – will
take the place of truth say
puraithIrndha nanmai –
faultless good
payakkum enin – if
it is able to bring in
This verse is an easily
understood one and most used one by many, either for convenient garb or to
convey the situation in which a falsehood was accepted without reservation.
Even falsehood is considered truth, if it can bring forth blemishless or
faultless good to everyone, is the main theme conveyed in this verse.
Most people use this to
justify their falsehood (mostly for their convenience). If falsehood can bring
good to even four persons, then there is nothing wrong with it, is the common
refuge taken by most self-centered truth-negators. Also in common usage is
that, even by saying thousand lies, a wedding can be performed, here implied
good being a girl getting a husband, the ultimate goal given for a girl.
VaLLuvar’s
emphasis on “purai thIrndha” is just to
clarify these mis-usages. The good that is brought forth should be common good
for most people, not for the selfish gains of opportunistic few. .
How do we define
falsehood? Not saying what happened or saying what did not happen are both considered
falsehood. In both situations, if there is common good for a larger community,
then they are equivalent to virtuous deeds and hence kept at par with the
truth, is how vaLLuvar definies falsehood in this verse.
“Even falsehood is placed at part with virtuous
truth
If it
can bring good to people at large without wrath”
பொய்ம்மையும் - உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும்
வாய்மையிடத்த - உண்மையான சொற்களைப் போன்றவையே
புரைதீர்ந்த நன்மை - குற்றமில்லாத நன்மையினை
பயக்கும் எனின் - தரக்கூடிய சொற்கள்
இக்குறள் எளிதாக புரிகிற
குறள், அதிகம் புழக்கத்திலிருக்கும் குறள்! பொய்ம்மையான சொற்களும், வாய்மையானவையாக் கருதலாம்,
அவை குற்றமில்லாத நன்மையினைச் செய்யுமானால், என்பதே இக்குறளின் கருத்து.
பெரும்பாலோர் தங்கள் வசதிக்காக,
தங்களை நியாயப்படுத்துவதற்காக பயனாக்கும் குறளிது! ஒரு நான்கு பேர்களுக்கு நன்மையென்றால் எதுவொன்றும்
தவறில்லை என்பவர்களின் சரணாலயமான குறள். இதையே ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை
(நன்மை) நிகழ்த்தலாம் என்று வாழ்வின் இன்றியமையாத ஒரு நிகழ்வுக்கும் வெகு இலகுவாக சொல்லிவிடுகிறார்கள்.
வள்ளுவர் இதற்காகவே, “புரைதீர்ந்த”
என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். விளையக்கூடிய நன்மை பொதுவிலே எல்லோருக்கும்,
அனைத்துவிதமாகவும் நன்மை பயப்பதாக இருக்கவேண்டும். நான்கு பேருக்கு நன்மையும், மற்றவருக்கெல்லாம்
அஃதின்மையுமாக இருக்குமானால், பொய்ம்மை வாய்மையாகிவிடாது.
பொய்ம்மை என்பதென்ன? நிகழ்ந்ததைக்
கூறாததும், நிகழாததைக் கூறுவதும் என்னுமிரண்டுமே பொய்ம்மைதான். இதனால் குற்றம் இல்லாத
நன்மைவிளையுமாயின், அவை அறச்செயல்களுக்கு ஒப்பாகுமாகையினால், அவையும் வாய்மையிடத்தே
வைக்ககூடியவைதான் என்பதே வள்ளுவரின் வாக்கு,
இன்றைய குறள்:
குற்றமில் நன்மைதரும் பொய்ம்மையும் கூறிட
உற்றநல் வாய்மையென்றா
கும்
kuRRamil
nanmaitharum poimmaiyum kURiDa
uRRanal
vAimaiyenRA gum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam