பிப்ரவரி 06, 2013

குறளின் குரல் - 300


30:  (Truth - வாய்மை)

[One of the most often quoted chapters, this comes after the chapters on "conduct to be avoided" and "not stealing"; they are the results of desires and the avarice for women and wealth in wrongful ways, respectively and result in falsehood. Truthfulness is being devoid of falsehood in conduct and words. Though the first verse directly addresses Truthfulness, surprisingly, most other verses focus on nature and repercussions of falsehood in contrast to truthfulness]

6th February, 2013

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
                       (குறள் 291:  வாய்மை அதிகாரம்)

Transliteration:
vAymai enappaDuvadhu yAdhenin yAdhondRum
thImai ilAdha solal

vAymai enappaDuvadhu – the truthfulness as defined
yAdh(u) enin – what is it, if you ask (i.e. the truthfulness)
yAdhondRum – in any form of  and for everyone
thImai – harm or ill
ilAdha – not causing or meaning
solal – by spoken words

In this beginning verse of this chapter, vaLLuvar defines what truth is. What a person speaks, when it does not cause any harm to anyone, then it is known as truth. Truth is like absolute bliss and it can bring only happiness to anyone. In real life truth brings happiness to some and harm to others, based on which side of the truth they belong to. Truth is just and, unjust people cannot feel happy about and welcome the truth.  If they feel the harm, it is not justified.

This verse also sets the basis for the following verse, which gives a justification for “false” under a specific condition.

“What truth is, is defined as: for none and in no form
 Ever by what is said, ill is intended causing any harm” 

தமிழிலே:
வாய்மை எனப்படுவது - உண்மை என்று சொல்லப்படுவது
யாதெனின் - எது என்று எண்ணப்புகுந்தால்
யாதொன்றும் - ஒருவிதத்திலாயினும், ஒருவருக்கும்
தீமை - தீங்கி விளைவிக்கக் கூடியவாறு
இலாத - இல்லாமல்
சொலல் - பேசுதல் ஆகும்

இவ்வதிகாரத்தின் முதற்குறளில் வாய்மையை வரையறுக்கிறார் வள்ளுவர். யாதொரு உயிருக்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காமல் ஒருவர் பேசுகின்ற பேச்சே வாய்மை எனப்படும். உண்மை சுடும் சிலருக்கு. அதனால் அவர்களுக்கு வருத்தமும் ஏற்படக்கூடும். அதில் குற்றமில்லை. கூடியவரை பிறருக்கு தீங்கு விளைவிக்காத சொற்களைச் சொல்லுபவர்கள், வாய்மையைப் பேசுவதாகவே கருதப்படுவர்.

அடுத்து வரக்கூடிய குறளுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது இக்குறள். அக்குறளில், எப்போது பொய்ம்மையும் வாய்மையாகக் கொள்ளலாம் என்பதைச் சொல்லுவார் வள்ளுவர்.

இன்றைய குறள்:
யார்மாட்டும் தீங்கு பயக்காது பேசுதலே
பார்சொல்லும் வாய்மை யென

yArmATTum thIngu payakkAdhu pEsudhalE
pArsollum vAymai yena

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...