4th
February, 2013
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
(குறள் 289:
கள்ளாமை அதிகாரம்)
Transliteration:
aLavalla seydhAngE vIvar kaLavalla
maRRaya thERRA dhavar.
aLavalla – those which are
not appropriate for the assumed ascetic state
seydhAngE – indulged in
those (inappropriate deeds)
vIvar – will die (to imply the seriousness
of such crime)
kaLavalla – nothing but
desiring to steal others possessions
maRRaya – other good self-elevating austerities
thERRAdhavar – does not learn
having take the penitents garb
In this verse,
vaLLuvar says, when the people that are in ascertic order, cross the boundaries
of the ethical codes stipulated for them, not trying to spend their time
learning to serve humanity with their order, they will face death by their own
deeds unbecoming of their chosen path. He has used a very rarely used word
“vIVu” which means “death” here to suggest the severity of the repurcussions
for crossing the ethical borders.
If vaLLuvar had
used a word “vIzhvar” instead of ‘vIvar” tha could have indicated the “fall”
instead of “death” and poetical meter would not have been compromised either.
But he wanted to imply the severity of repurcussion. In Christianity, the
phrase “The wages of sin is death” is often used to show the severity of the
punishment for sinning. Though the death is the unavoidable eventuality for
everyone, untimely death is portrayed as the repurcussion of the unbecoming act
of somebody.
“Transgressed ascetics will perish because
of their unbecoming conduct
When they cross the boundaries of chosen order
with utter disrespect”
தமிழிலே:
அளவல்ல - இந்நெறிக்கு (துறவறத்துக்கு) ஏற்ற கட்டுபாடுகளுக்கு
உட்படாத (வகுக்கப்பட்ட நெறிகளின் எல்லைகளை மீறிய)
செய்தாங்கே - அல்லனவற்றை செய்து
ஆதலினால்
வீவர் - சாவர் (வீவு - சாவு); வீழ்வர் என்னாது
வீவர் என்றது விளைவின் உச்சத்தைக் காட்ட
களவல்ல - பிறர் பொருளை விழைந்து களவாடும் எண்ணமல்லாது
மற்றைய - மற்றைய் நல்வழிகளைத்
தேற்றாதவர் - (தம்முடைய துறவினால்)
கற்று கொள்ளாதவர்
இக்குறளில், துறவுநெறிக்கு வகுக்கபட்ட எல்லைகளினை மீறி,
களவாடுதலைத் தவிர, அறநெறி வழிகளில் தேர்ச்சிபெற கற்றுக்கொள்ள முயலாதவர், தாம் செய்யும்
அல்லவையாலேயே அழிந்துபடுவர், என்கிறார் வள்ளுவர்! வெகு சொற்பமாகவே கையாளப்படும் “சாவு”
என்னும் பொருள்தரும் சொல்லான “வீவு” என்ற சொல்லை இங்கு பயன்படுத்தியுள்ளமையினால், நெறி
தவறிய துறவிகளுக்கு ஏற்படும் சாவு என்பதை அடிக்கோடிட்டுள்ளார்.
“வீழ்வர்” என்ற சொல்லும் அவர்களின் வீழ்ச்சியை குறித்திருக்கும்
ஆனாலும், வீவர் என்ற சொல்லால், அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாளுக்கு முன்னரே
அழிந்து மடிவர், என்பதையே வள்ளுவர் சுட்டுகிறார். கிறித்தவ விவிலியத்தில் பொதுவாகச்
சொல்லப்படுகிற “பாவத்தின் சம்பளம் மரணம்” என்பதை துறவு நெறியினருக்குச் சொல்லுகிறார்
வள்ளுவர். மரணம் என்பது எல்லோருக்கும் எப்போதாவது நேருமென்றாலும், காலத்திற்கு முன்பாக
வருவது செய்யும் வினைப்பயனால் என்று கொள்ளவேண்டும்.
இன்றைய குறள்:
கள்ளலன்றி மற்று கருதாதோர்̀ கட்டுமீறி
தள்ளியன செய்த ழியும்
kaLLalanRi maRRu karudhAdhOr kaTTumIRi
thaLLiyan seydha zhiyum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam