நவம்பர் 24, 2012

குறளின் குரல் - 226


24th November, 2012

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
              (குறள் 217: ஒப்புரவறிதல் அதிகாரம்)

Transliteration:
marundAgith thappA maraththaRRAl selvam
perunthagai yAnkaN paDin

marundAgith – With each part of it, contributing as medicine for others
thappA – without  deviating from that duty (perfoming giving it self as a virtuous duty)
maraththaRRAl – like a tree (which gives itself totally)
selvam – the wealth of
perunthagaiyAn kaN paDin –  a great person of helping and giving tendency

India has a long tradition of viewing trees as the philosophical and living basis of life. All the trees such as Peepal, Banyan (Bodhi), Neem, Banana and the Coconut trees serve the human race while they live and even after they die; banana tree, especially is very special as every part of it is useful to us.

The thought expressed in this verse is this: The wealth of benevolent people is similar to trees that give every inch of them, to others benefit as healing medicine. Only people of noble heart will serve to be a healing force in the lives of others.

There is a well-known adage about a philanthropist “Seethakkadhi” who was a patron to the poet, “Umaru pulavar” – “Seththum koduththan seethakkadhi”. Though this is in reference to a patronizing heart of a great soul, people of kind heart, giving nature are a true healing force in the lives of needy and their wealth does the healing.

“As the healing medicinal tree is, every part of it,
 Is the wealth of benevolent person of noble heart”

தமிழிலே:
மருந்தாகித் - தன்னில் ஒவ்வொரு பகுதியாலும் பிறர்க்குப் பயனாகும் மருந்தாகி
தப்பா - அதிலிருந்து வழுவாமலுள்ள (அதை அறமென்று வழுவாது)
மரத்தற்றால் - மரத்தைப் போன்றதாம்
செல்வம் - செல்வமானது
பெருந்தகையான் கண் படின் - தன் வளங்குன்றினும் பிறர்குதவும் ஒப்புரவாம் பெரும் தகைமை உடையவரிடத்தில் இருக்குமானால்.

நமது பாரத நாட்டில் மரங்களை வாழ்வாதாரங்களாகவும், வாழ்க்கைத்தத்துவங்களை உணர்த்துவதாகவும் பல ஆயிரவருடங்களாக கருதும் வழக்கம் இருக்கிறது. ஆலமரம், அரசமரம், வேப்பமரம், தென்னைமரம், வாழைமரம், இன்னும் பலவும், மக்களின் வாழ்வாதாரங்களாக இருந்தும், இறந்தும் தம்மையே கொடுக்கின்றன. குறிப்பாக வாழைமரம் தன்னில் ஒவ்வொரு பகுதியாலும் பிறருக்குப் பயனாவதை எல்லோரும் அறிவோம்.

தன்னில் ஒவ்வொரு பகுதியையுமே பிறருக்குப் பயனாகக் கொடுத்து பிறருக்கு வாழ்வை நல்கும் பெருந்தகைமையான பண்பினை உடைய மரங்களைப் போன்றவர்கள் ஒப்புரவாளர்கள். அவர்களிடத்து உள்ள செல்வம் பிறருக்காகப் பயன்படுவதாம்.

உயிருள்ள போதும் மரத்தின் பாகங்கள் பிறருக்குப் பயனாகின்றன, அவை மடிந்தும், மக்களுக்கே பயனாகின்றன. ஒப்புரவில் ஒழுகும் பெருந்தகையாளர் செல்வமும் அத்தன்மையதே. ஈயார் தேட்டை தீயார் கொள்வார் என்பதுபோல, ஈவார் தேட்டை மேலோர் கொள்வர் என்றும் சொல்லலாம். நம் நாட்டிலேதான் “செத்துங் கொடுத்தான் சீதக்காதி” என்று ஒரு வள்ளலைப் பற்றிச் சொல்லுகிறோம்.

திரிகடுகப்பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

“வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூலும் - புணர்வின்கண்
தக்க தறியும் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம்”

அதாவது, கொடையாளனிடத்துற்ற செல்வமும், அறிவொடு கற்ற அறநூலும், தன்னை அடுத்தவர்க்குச் செய்யத்தக்கதைத் தெரிந்தவனும் உறுதியான பொருள்கள் என்கிறது இப்பாடல்.

இன்றெனது குறள்:
தன்னை மருந்தாக்கி ஈனுமரம் போல்பயனாம்
நன்றகையார் கைத்திருவுக் கே

Thannai marundhAkki Inumaram pOlpayanAm
nanRagaiyAr kaiththiruvuk kE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...