23rd November, 2012
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
(குறள்
216: ஒப்புரவறிதல் அதிகாரம்)
Transliteration:
Payanmaram uLLUrp pazhuththaRRAl selvam
Nayanu DaiyAnkaN paDin
Payanmaram – Like a tree that is useful to all by its fruits
uLLUrp – and growing in a common place in the town
pazhuththaRRAl – with fruits in abundance
selvam – is wealth with a person of
Nayan – benevolence
uDaiyAnkaN paDin – that who possess that quality (benevolence)
The wealth of a benevolent person is like a fruit tree that grows in a
common place in a town, accessible to
everyone alike; especially to those who are needy.
A kamba rAmAyaNa verse says, “pArkezhu pazhumaram pazhuthaRRAgavum”
expressing a simlar thought. There are othere references in Sangam literaturr
expressing the same; either similar thoughts
individually occurring in the great minds or a simple borrowing of a nicer
thought by contemporary poets. May be the ancient culture had such iconic
representations in the society to subtly teach the values to commoners.
nAlaDiyAr has three verses that express the similar thought:
“naDuUruL vEdhikaich chutRukOL pukka paDupanaiyannar palar nachcha
vAzhvAr”(96).
“thunnik kuzhaikoNDu thAzhndha kuLirmaramellAm uzaithangkaN senRArkku
orungu”(167)
“pazumarampOl pallAr payanthuyppath thAnvarundho vAzhvadhe naLLAN magarkkuk
kaDan“(202)
The connotation of a fruit is to imply “enjoyment”, “sweet” and “healthy”,
which is the same when the wealth is useful to “have-nots” and needy. The tree
that is in a common place indicates the wealth of a benevolent person that is
also useful to everyone deserving alike.
“Wealth of “benevolent” is
like a fruit tree
in the middle of town for everyones glee”
தமிழிலே:
பயன்மரம் - எல்லோருக்கும் தன் கனிகளால் பயன்படுகின்ற மரமானது
உள்ளூர்ப் - ஊருக்குப் பொதுவான இடத்திலே
பழுத்தற்றால் - காய்த்து, கனிந்து பழங்களால் நிறைந்தார் போன்றதாம்
செல்வம் - செல்வமானது
நயன் - ஒப்புரவாம் பிறர்க்குதவும் நற்குணம்
உடையான்கண் படின் - உடையவர்களிடத்தில் இருக்குமானால்
ஊருக்குப் பொதுவான இடத்தில் ஒரு நல்ல கனிகளைத்தருகின்ற மரமானது கனிகளால் நிறைந்து
ஊருக்கே பயனாவது போலவாம் ஒப்புரவென்னும் ஒப்பிலா குணத்தினை உடையவரது செல்வமானது. அது
எல்லோருக்கும், குறிப்பாக தேவையுளோர்க்கு பயனாகும் தன்மையது.
இதேபோன்று பழுத்தமரம் பயனாகுதலை கம்பராமாயண மந்திரப்படலப் பாடல் வரியொன்று இவ்வாறு
கூறுகிறது: “பார்கெழு பழுமரம் பழுத்தற்றாகவும்”.
நாலடியார் பாடல்கள், இப்பாடலின் கருத்தினையொட்டி கூறும் பாடல் வரிகளாவன:
“நடுஊருள் வேதிகைச் சுற்றுகோள் புக்க படுபனையன்னர் பலர் நச்ச வாழ்வார்” (96).
“துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் உழைத்தங்கண் சென்றார்க்கு ஒருங்கு”
(167)
“பழுமரம்போல் பல்லார் பயந்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன்”(202)
பழமென்ற உவமை, துய்க்கக்கூடியதும், இனிமையானதும், உடலுக்குப் பயனாவது போன்ற குணத்தை
உடையதுமாகையால். பொதுவிடம் பழுத்த மரம் என்றது,
ஒப்புரவு ஒழுகுவாரின் செல்வத்தைப் போன்று எல்லோருக்குமே உரிமையானது, கிடைக்கக்கூடியதுமாம்.
இன்றெனது குறள்:
ஒப்புரவார் தம்செல்வம் ஊருளோர்க்
காய்கனிகள்
எப்போதும் ஈனுமரம் போல்
(ஊர் உளோர்க்காய் கனிகள்; ஈனும் மரம்)
oppuravAr thamselvam UruLOrk kAikanigaL
eppOdum Inumaram pOl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam