23rd Aug, 2012
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
(குறள் 124: அடக்கமுடைமை அதிகாரம்)
Transliteration:
Nilaiyin thiriyAdhu aDangiyAn thOtRam
Malaiyinum mANap peridhu
Nilaiyin – from the stance of virtuous life
thiriyAdhu - not changing
aDangiyAn - one that lives a self-restrained, composed
life,
thOtRam – and that persons’ greatness is,
Malaiyinum – more than a high scaling mountain’s,
mANap peridhu – bigger and
better
This verse expresses and
expounds a simple thought. Life of a person that does not veer from the virtuous
trail with utmost restraint, composure will scale higher than the tallest peak
of the tallest of mountains and be glorious.
Though the symbolism
of “mountain here is to express the glorious heights, since it does not change
its place or size, it also becomes the symbol of stability and unchanging nature.
The phrase “nilaiyin
thiriyAdhu” means not changing regardless of growth or lack of it in a person’s
life. Anything of external manifestation in life in general, shows the impermanence;
but the inner virtues are the demonstration of a rock solid determination. This
is possible only for people of utmost discipline and determination while
practicing virtuous life.
Glory of utmost restraint that unswervingly sustain
Scale taller than the immensity of a tall mountain
தமிழிலே:
நிலையின் – தான் வாழும் நன்நெறி சார்ந்த வாழ்நிலையிலிருந்து
திரியாது – மாறாமல்
அடங்கியான் – அடக்கத்தின் வழிநின்று வாழ்பவரின்
தோற்றம் – உயர்வானது
மலையினும் – நெடிதுயர்ந்து நிற்கும் பெரு மலையின் உயரத்தையும் விட
மாணப் பெரிது – மிகச் சிறப்புடன் பெரியதானதாம்
இக்குறள்
சொல்வது மிகவும் எளிதான கருத்துதான்.
நன்னெறி சார்ந்த வாழ்விலிருந்து மாறாது, தன்னடக்கமுடன் வாழ்பவர்களின்
சிறப்பானது விண்ணளக்கும் மலையின் உயரத்தைவிடவும் மிகவும் சிறப்பையும் உயர்வையும்
உடையது.
உயர்வின்
குறியீடாக மலையைச் சொன்னாலும், மலையானது தன்நிலையும், உயர்வும் மாறாத
தன்மையதாதலால், பொருத்தமான உவமையாகவும் ஆனது. மலையென்பது வியப்புக்குரிய உச்சமும்
ஆதலால், அவ்வகையிலும் இது பொருத்தமே.
“நிலையின்
திரியாது” என்றது வளத்தில் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும், தன் குணநிலையிலிருந்து
சற்றும் குன்றாமல், மாறாமல் நிலைத்திருத்தல். வாழ்க்கையில் புற பௌதீகங்கள்எல்லாமே
நிலையாமையைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அகம் சார்ந்த நன்னெறிகளோ உள்ளம் சார்ந்த உறுதிப்பாட்டின்
வெளிப்பாடுகள். இந்த நன்னெறிகள் தன்னெறிகளாக
உறுதிபட நிற்பவர்களுக்கே இயலுமாதலால், குறளின் தொடக்கமே அக்கருத்தை அழுத்திச்
சொல்கிறது.
இன்றெனது குறள்:
நெடிதுயர்ந்த நீள்மலையின் ஒங்கும் அடக்கம்
குடிநெறியாய் கொண்டார்க் குயர்வு
Nedidhuyarndha nILmalayin Ongum aDakkam
kuDineRiyAi konDarkku kuyarvu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam