2ndAug, 2012
பயன்தூக்கார் செய்த உதவி
நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
(குறள் 103: செய்நன்றியறிதல் அதிகாரம்)
Transliteration:
Payan thUkkAr seydha
udhavi nayanthUkkin
Nanmai kaDalin peridhu
Payan thUkkAr – without expecting any returns
seydha – what they did
udhavi – as help
nayanthUkkin – if you analyze and weight its merits
Nanmai - the goodness out of it
is
kaDalin - ocean
peridhu – bigger than (the ocean)
Through the first three verses, vaLLuvar puts forth three
different types of help extended by people of virtue. As Sanskrit literature
would often use a phrase, “avyAja karuNAmUrthi” (a vyAja karuNAmUrthi – without
reason, the compassionate God), helping without any reason is the first kind.
Helping timely is the second kind. The third kind is without any expectation of
return.
The person in this verse could have sought help from others in
the past or may seek in the future, but when he or she helps, it is done
without anything in kind or deed expected from the person helped. He says that type of help is bigger than an
ocean.
In the first verse of this chapter, he said for the help without
reason, even the world and the skies can not be given as compensation. In the 2nd
verse, he said the timely help extended is much bigger than the world itself
and now in the 3rd verse, the help without any expectation in return
is bigger than the ocean. Though there are subtle differences in the way they
are said, he makes it amply clear that they are all different situations. Also,
if the comparison is the same it would be boring and hence he has used
different comparison to denote the bigness of kind help. The comparison of
ocean makes sense in this verse, because the ocean does not give its wealth to
human beings without anything in return.
Probably the constraints of kuraL meter have complelled vaLLuvar
to write 3 verses instead of one. Or he seriously felt that they have to be
said separately to be noticed by the readers.
Not done with
expectation of return, the goodness of kind help
Is enormous in expanse
of an ocean when merits measured up
தமிழிலே:
பயன்தூக்கார் – எந்தவொரு எதிர்ப்பயனும் எதிர்பாராமல்
செய்த – ஒருவர் செய்கின்ற, செய்த
உதவி - உதவியை
நயன்தூக்கின் – சீர்தூக்கிப் பார்த்தால்
நன்மை – அதனால் (உதவியினால்) விளையும் நன்மை
கடலின் - கடலைவிட்
பெரிது - மிகப்பெரியது
இவ்வதிகாரத்தின் முதல் மூன்று குறள்களாலும், எவரும் தனக்கு
உதவிசெய்யாமலிருந்தாலும் (காரணம் இன்றி செய்த உதவி), தானாக பிறருக்கு உதவி செய்தல்,
தக்க நேரத்தில், வேண்டிய உதவி செய்தல், பற்றி கூறிவிட்டு இப்போது, எந்தவொரு
எதிர்பார்ப்பும், இல்லாமல் பிறருக்கு ஒருவர் செய்கின்ற உதவி பற்றி கூறுகிறார்
வள்ளுவர். முதல் குறளுக்கும், இதற்கும் என்ன வேற்றுமை? சமஸ்கிருத பக்தி இலக்கியங்களிலே “அவ்யாஜ கருணா
மூர்த்தி” என்ற சொற்றொடர் நிறைய இடங்களில் இருக்கும். இதற்கு எவ்வித காரணமும்
இல்லாமலே கருணையோடு இருக்கும் இறைவன் என்ற பொருள்.
இக்குறளில் கூறப்படுகிறவருக்கு பிறர் உதவி செய்திருக்கலாம், இவரும்
உதவிகள் கோரியிருக்கலாம். ஆனாலும், தான் ஒருவருக்கு உதவும் போது, இதைச் செய்தால்
இந்த பயன் என்ற எந்தவொரு நோக்கமும் இல்லாமல் செய்யபடுகிற உதவியைப் பற்றி
குறிப்பிடுகிறார் வள்ளுவர். அவ்வாறு பயன் கருதாது செய்த உதவி, கடலைவிடவும்
பெரியதென மதிக்கப்படும்.
முதலில் செய்த உதவி வையகம், வானம் இரண்டையும் கொடுத்தாலும்
இணையில்லை என்றார். அடுத்த குறளில் உலகத்தை விடப்பெரியது என்றார். இப்போது, கடலை
விடப் பெரியது என்கிறார். இந்த ஒப்புமைகளெல்லாம் உதவுதலில் அளவிறந்த சிறப்பை
வலியுறுத்துவதோடு, ஒரே ஒப்புமையாக இருந்தால் சலிப்பு தட்டிவிடும் என்பதால்
இருக்கலாம். தவிரவும் கடல் என்றது கடல் தன்னுள் இருக்கும் வளங்களையெல்லாம் மனித
குலத்துக்கு, எவ்வித பயனும் கருதாது தருவது போலவாம் பயன்கருதாமல் ஒருவர் செய்கின்ற
உதவி என்று வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.
இன்றெனது குறள்:
எப்பயனும் தான்கருதார்
செய்யுதவி சீர்தூக்கின்
இப்புவிசூழ் ஆழி சிறிது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam