ஜூலை 19, 2012

குறளின் குரல் - 99


19th July, 2012

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
                       (குறள் 89: விருந்தோம்பல் அதிகாரம்)

Transliteration:
uDamaiyuL inmai virundhOmbal OmbA
maDamai maDavArkaN uNdu

uDamaiyuL  - Though being wealthy
inmai  - is as good as not having and being poor (when)
virundhOmbal  - the virtue of hospitality
OmbA – not practicing that virtue
maDamai – is being foolhardy
maDavArkaN – and is characteristic of ignorant
uNdu -  only they will be so impervious to hospitality

This verse has a parallel thought to the previous verse. One of the more recent pAndyA kings, adhivIrarAma pAndya, who was a great tamil poet and has written quite a few collections on ethics and justice. One of his works “vetRi vERkkai”,  a compilation of one liners, says, the rich must support the people that come to them for help - “செல்வர்க்கழகு செழுங்கிளைத் தாங்குதல்”.  Though the line implies supporting all the near and dear relatives, it is generally applicable to all that are in need.

Even after having a huge wealth, acting as if they have none, and not being hospitable is the height of stupidity and only foolhardy ones do that. Running after and accumulating wealth, without even considering the simplest deed of feeding guests is foolish and out of ignorance. 

Though the thought conveyed here can not be refuted, it seems vaLLuvar after having, emphasized the imperative of hospitality, through the last and the current verses, make a hard hitting assertions to put down wealthy that are not hospitable. He once again employs the same technique he used in the previous chapter. After mentioning the the importance of hospitality and the glory of the people that are hospitable, he expresses the worlds view of people that are not hospitable, probably with the hope that at least a few among them would course correct themselves.

Foolhardy people that have wealth but won’t be hospitable
Act as if they have none; they are sensless and deplorable

தமிழிலே:
உடைமையுள் – செல்வம் பெற்றிருந்தும்
இன்மை  - எதுவும் இல்லாத தன்மை
விருந்தோம்பல் - விருந்தோம்பும் பண்பினை
ஓம்பா – கொள்ளாத
மடமை – பேதமை கொண்ட
மடவார்கண் - அறிவிலிகளிடமே
உண்டு - இருக்கும்

சென்ற குறளின் கருத்துக்கு இயைந்த கருத்தாகவே இக்குறள் புனையப்பட்டுள்ளது. “செல்வர்க்கழகு செழுங்கிளைத் தாங்குதல்” என்று வெற்றிவேற்கையில், அதிவீரராம பாண்டியர் கூறுவார்.   “காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே” என்ற பட்டினத்தார் வாசகமும் “உங்கள் அத்தமெல்லாம் ஆழப் புதைத்து வைத்தாலும் வருமோ நும் மடிப்பிறகே” என்று எங்கோ படித்த கவி வாக்கும் நினைவுக்கு வருகின்றன.

பெருஞ்செல்வம் பெற்றிருந்த்தும், எதுவும் இலாதவர் போன்று மடமையில் உழலுபவர் விருந்தோம்பும் பண்பினை அறியாத பேதமையிலும், மடமையிலும் இருப்பவர். இது அறிவிலிகளுக்கே உரிய இயல்பாம்.   மடமை என்றது, நில்லாத வாழ்வில், நிலையாத செல்வத்தை தேடித்தேடிச் சேர்த்துவைத்து, வந்தோரை வாழவைக்க மனமில்லாதவர்களின் அறிவின்மையைக் குறிப்பதால்தான்.  அறிவிருந்தால், அறம் தெரியும், ஈத்துவக்கும் குணமும் இருக்கும். அது இன்மையின் அறப்பண்பாகிய விருந்தோம்பல் இலாதிருக்கும்.

வள்ளுவர் முந்தைய அதிகாரத்தில் சொல்லியவண்ணமே, முதலில் விருந்தோம்பலின் இன்றியமையாத தன்மை, சிறப்பு இவற்றைக் கூறிவிட்டு, விருந்தோம்புவாரின் பண்புநலன்கள், அவர்கள் அடையும் சிறப்பு இவற்றையும் கூறிவிட்டு, அப்பண்பு இல்லாதவரின் அறிவின்மை, வேண்டும் காலத்து, அருகிய துணையில்லாமல் போவது இவற்றையெல்லாம் கூறுவதன் காரணம் என்ன? ஏதோ, படிப்பவர்களில் ஒருசிலராவது திருந்தி அப்பண்பிலே ஒழுகுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் போலும்.

இன்றெனது குறள்:
பெற்றும் இலாத மடமையினர் உண்டவர்
சற்றும் விருந்தோம்பா தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...