6th July, 2012
அறத்திற்கே அன்புசார் பென்ப
அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
(குறள் 76: அன்புடைமை அதிகாரம்)
Transliteration:
aRathiRkE anbusAr
benba aRiyAr
maRathiRkkum ahdhE thuNai
aRathiRkE – Only for virtuous ways
anbu – love/compassion
sArbenba - helps
aRiyAr – is what is said by people, not knowing (what love can really
do!)
maRathiRkkum – even for the deed of vice
ahdhE - that can be
thuNai – a true help (by being compassionate to people of vice, they
can indeed be changed )
Even for an enemy, to be compassionate and loving, is a utopian
thought borne out extreme belief in goodness and ultimate hope of
reciprocation. For most, it is an unthinkable and not so practical feat. The
verse says, only unwise think that being a loving and compassionate person is
only a support for virtues. But the
truth is that it is also an equal support to people that are vice and vile.
Love has the ability to change even the worst enemy and turn
them virtuous. But this requires utmost faith in goodness to prevail at the end
and be consistent in love. We all read
again and again “Sathyameva Jayathe” and hold it as the highest truth. But
howmany truly believe in that? Just like many great truths, it requires faith
and surrendering to see its eventual victory.
As in Bhagavad Gita, “doing the duty, not expecting the return”
is absolutely true for love and compassion too. If it is done expecting a
return, it may lead only to disappointments most of the times, but eventually
it has the power to change even the most stone-hearted person to change and give
in.
There is another saying – “Be loving but never gullible”. This
must have come from the experience of taking something verbatim and practicing it
blindly; reminds us of the story of the saint and the snake as narrated by
Bhagavan Sri. Ramakrishna.
Ignorant say, unwary
of its power, Love supports only virtuous
Indeed it is equally a
support to mend the vice and treacherous
தமிழிலே:
அறத்திற்கே - அறவழியோர்க்கே
அன்பு – அன்பு குணமாவது
சார்பென்ப - துணையாகும் என்று
சொல்லுவர்
அறியார் – அன்பின் உண்மை வலி அறியாதவர்
மறத்திற்கும் – அறவழி வாழார்க்கும், அவர்களது மறச்செயல்களுக்கும் கூட
அஃதே – அவ்வன்பே
துணை – துணையென்பதை அறிந்தோர் புரிந்துகொள்வர் (அன்பு மறவழியோரையும்
மாற்ற வல்லது)
'பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்பது ஆன்றோர் வாக்கு. அன்பின் வழிநின்றலே அறச்செயல்கள் செய்வதற்கு
துணையாகும் என்பது எல்லோரும் அறிவதே. ஆனால் அன்பின் வழிநிற்றல் அறச்செயல்களுக்கு
மட்டுமே துணையென்பது அறியாதோரின் கூற்று. அன்பினால்
மறவழியோரையும் மாற்றி நல்வழியில் ஆற்றுபடுத்தக்கூடும் என்பதாலேயே, மறத்திற்கும்
அன்பே துணையென்று இக்குறள் கூறுகிறது.
மற்றொன்றும் நினைவுக்கு வருகிறது. 'அன்பாய் இரு ஆனால் ஏமாளியாய்
இராதே' என்ற சொல்வழக்கு ஒன்றுண்டு. “ராமக்ருஷ்ண
பரம ஹம்ஸரின்”, “ பாம்பும், துறவியும்” குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. நல்ல கருத்தாக
இருந்தாலும் காலவழக்கிற்கு ஏற்ற ஒன்றுதானா என்றும் சிந்திக்கவைக்கிற குறள்களில்
ஒன்று! ஆனால் -
“வாய்மையே வெல்லும்”, என்ற கூற்று எல்லோரும் விரும்பும், சத்திய
வாக்கு. ஆனால், எத்துணை பேர் நம்பும் வாக்கு? அதற்கு எத்தனைப் பொறுமை தேவைப்படுகிறது? இக்கூற்றும், பகவத்கீதையில் காணும், “கடமையைச் செய் – பலனை எதிர்பாராதே”
என்பதும், அன்புக்கும் பொருந்தும். எதிர்வினை
எதிர்பார்ப்போடு செய்யப்படும் எதுவும், பண்டமாற்று வணிகம்தான். அன்பைகூட
எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் போதுதான், அதன் முழுவீச்சும் பிறரை சென்றடைகிறது; அதனால் பகைகொண்டோர், மற்றும் மறவாழ்வினர் மனங்களும் மாறுகிறது.
இன்றெனது குறள்:
அன்பே அறவாழ்க்கைக்
காதாரம்– வெம்பகைக்கும்
அன்பே அருமருந் தாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam