ஜூலை 29, 2012

குறளின் குரல் - 109


29th  July, 2012

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
                       (குறள் 99:  இனியவை கூறல் அதிகாரம்)

Transliteration:
Insol inidhIndRal kANbAn evankolO
Vansol vazhanguvadhu

Insol  - sweet words (soothing words)
Inidh(u) – pleasurable experience
IndRal  - gives
kANbAn  - who sees that (the pleasurable experience given by soothing words)
evankolO – who will and what for ?(after experiencing the  sweetness of insol or sooth-speak)
Vansol – harsh words
Vazhanguvadhu – speak to others

Why and for what would a person, who realizes that the sweet conversations with others or sweet words heard from others give immense pleasure, use harsh words towards others?  Most commentators have interpreted the verse from the perspective of the recipient of good words. Though that seems to be the general scenario, and a well known truth, this verse seems applicable to both, who are recipient as well as the ones who have sweet words for others.

When we derive pleasure, from others speaking sweet words to us, we must reciprocate the same or at least, speak devoid of hard words and tone, as a minimum requirement.

When someone who is used to speaking sweet and soothing words, gets angry, care must be exercised not to use harsh words and must think if it is worth to lose the pleasure of soothing words. Sangam anothologies “innA naRpadhu” and “nAnmaNi kadigai” have ample references to this. nAnmaNi kadigai says, those who use harsh words will get only the same in reciprocation, while being nice and respectful gets good circle of friends and make everyone a relative.

People of harsh words lose good friends. Since the lord of death will come through the words of illiterate, people of harsh words are likened to the illiterate.

Experiencing the pleasure of words that’re sweet
Why would anyone speak harsh words replete?

தமிழிலே:
இன்சொல் – இனிமையாகப் தாம் பிறரிடம் பேசுதலும், தன்னிடம் பிறர் பேசுதலும்
இனி(து) - இன்பத்தினைத்
ஈன்றல் - தருவதினைக்
காண்பான்  -  கண்கூடாகக் காண்பவர்
எவன்கொலோ  - யார்தான், எதன் பொருட்டு?
வன்சொல் – பிறரிடத்தில் கடுஞ்சொற்களைக் கூட்டிப்
வழங்குவது – பேசுவார்கள்?

இனிமையாக தான் பிறரோடும், தன்னோடு பிறரும் உரையாடுதலின் இன்பத்தினை அறிந்து உணர்ந்தவர்கள், எதற்காக, ஏன், பிறரிடம் கடுஞ்சொற்களைக் கூட்டி பேசவேண்டும்?  பெரும்பாலும், உரையாசிரியர்கள் “இனிமையான பிறர்கூறும் சொற்கள்” என்று நுகர்வோர் கோணத்திலேயே எழுதியுள்ளார்கள். பொதுவாக அதுதான் உண்மையாக இருந்தாலும், இனிமையாகப்பேசி, மற்றவர்கள் அதனால் அடையும் இன்பத்தையும், தானே அடையும் இன்பத்தையும் உணர்ந்தவர்களுக்கும் இக்குறள் பொருந்தும்.

பிறர் தன்னிடம் பேசும் இனிய மொழிகளிலே இன்பம் அடைகிறவர்கள், மற்றவரிடத்திலே தாங்கள் பேசுவது வன்மொழியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நுகர்வோருக்கான குறைந்தளவு பண்பு அது.

பிறரிடத்தின் இன்மொழி பேசுபவர்களுக் கூட, சில சமயங்களில் வருத்தம், வெகுளி கொள்ள நேரும்போது, தங்கள் பேசும் இன்மொழியிலே இருக்கக்கூடிய இன்பத்தை இழக்கவேண்டுமா என்று சிறிது சிந்திக்கவேண்டும். கபிலரின் இன்னா நாற்பது “அறமனத்தார் கூறுங் கடுமொழியின்னா” என்கிறது.  அறமனத்தோர் கூறுகின்ற கடுமையான மொழியானது துன்பத்தைத்தரும் என்கிறார் கபிலர்.   அறமொழியினராக இருப்பின், வன்மொழி பேசுதல் இராது. அப்படிஅவர்களே வருந்தி பேசும்போது, அது பிறர்க்கும் ஊறு விளவித்து, அவர்களுக்கே கூட மனவருத்தம் என்கிற துன்பத்தைத் தந்துவிடும். சங்க நீதிநெறி நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை “நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை” என்றும் “கல்லா ஒருவர்க்கு தம்வாயிற் சொற்கூற்றம்”, “வைததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை” என்கிறது.

வன்மொழி பேசுபவர்கள் நல்ல நட்புகளை இழப்பர். கல்லாத ஒருவருக்குத் தான் அவர் வாய்ச்சொல் மரணதேவனாக முடியும் என்பதால், வன்மொழியாளர்கள் கல்லாதவர்க்கே ஒப்பாவர் என்றும் உணர்த்தப்படுகிறது.  தவிர, ஒருவரை வன்மொழி பேசுவதால், அதுவே நமக்கும் வந்து சேரும். ஆனால் இன்மொழியால் வணங்குபவர்க்கு, எல்லோருமே சுற்றமாகி விடுவர். மேலும், இன்சொல், வன்சொல் இவற்றின் பயன்களையும் கீழ்கண்டவாறு சுருங்கச் சொல்கிறது.

“இன்சொலான் ஆகும் கிழமை, இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் – மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்”   

இன்றெனது குறள்:
இன்பளிக்கும் இன்சொல் எனவறிந்தோன் மற்றார்க்கு
வன்சொல்லல் எப்பயனுக் காய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...