28th July, 2012
சிறுமையுள் நீங்கிய
இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம்
தரும்.
(குறள் 98: இனியவை கூறல் அதிகாரம்)
Transliteration:
siRumayuL nIngiya
insol marumayum
immayum inbam tharum
siRumay – meanness in thoughts
uL nIngiya – innately absent
insol – sweet words
marumayum – in the next birth
immayum – and in the current birth
inbam - happiness
tharum- will give.
In his commentary Parimelazhagar has interpreted the word “sirumayuL”
as a case (vibhakthi) related transuse “sirumayin” called “urubu mayakkam”, the
ending part of nouns and pronouns that define the particular case; but it makes
sense even as it is when we interpret it as “innate meanness or pettiness”.
It is understandable why Parimelazhagar, the commentator
mentioned about the current and future birth in the previous verse, though
there was no explicit reference to that in that verse. This verse has it
clearly spelt out. In this verse,
vaLLuvar says that the sweet words devoid of pettiness (small mindedness or
meaneness) will give happiness in the next and the current birth.
Parimelazhagar calls the sweet words as the “disease free sweet
words”; has used the word “nOi” (disease) in the sense of trouble causing
happenings. He also concludes, the first in order usage of “Next birth” (மறுமை)
in the verse, is to convey its importance. There is a subtle human psychology implied
here. The human tendency is to worry about the safetly in future and hence go
in “accumulate amd save mode”, whether they are objects or the currency of
virtue to be exchanged in the future births.
I have also used the 7 future births as done by vaLLuvar in
other verses, instead of saying just the next birth.
In this life and
beyond, is there happiness
For people of sweet
words free of pettiness
தமிழிலே:
சிறுமை – கீழ்த்தரமான, குறுகிய எண்ணங்களை
உள் நீங்கிய – தன்னுள் இல்லாமல் நீங்கிய
இன்சொல் – (சொல்லப்படும்) இனிய சொற்கள்
மறுமையும் – மறுபிறப்பிலும்
இம்மையும் - இப்பிறப்பிலும்
இன்பம் – இன்பத்தினைத்
தரும் – தரக்கூடிய தன்மையுடையது
“சிறுமையின்றும்”
என்பது உருபு மயக்கத்தினால் “சிறுமையுள்”
ஆனது என்று கீ.வா.ஜ வின் ஆராய்ச்சிப் பதிப்பு கூறுகிறது. அப்படி இருக்கலாம், ஆனால்
“சிறுமை+உள் அடக்கிய” என்று
பிரித்துப் பொருள் கொண்டால், சிறுமைத்தனமான எண்ணங்களை உள்ளடக்கமாகக் கொள்ளாமல்,
அவை நீங்கப் பெற்ற என்பதும் பொருந்தி வருகிறது.
முந்தைய குறளின் கருத்துக்குப் பரிமேலழகர் இம்மை, மறுமை என்று
ஏற்றிச் சொன்னதன் காரணம் இக்குறளில் தெரிகிறது. கீழ்த்தரமான, குறுகிய நோக்க
எண்ணங்களை, தன்னுள் இல்லாமல் நீங்கி, சொல்லப்படும் இனிய சொற்கள், இம்மை மறுமை
இருமையிலும் இன்பத்தைத் தரவல்லது.
பரிமேலழகர் தன்னுடைய உரையில் பிறர்க்கு “நோய் செய்யாத இனிய சொல்” என்று கூறுகிறார். இதில் நோய் என்பது, “துன்பத்தினையும் வருத்தத்தினையும்” என்ற
பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. மறுமையின்பம் பெரிதாகலின், அதனை முதலில் சொன்னதற்கான
காரணமும் சொல்லுகிறார். இதில் மனித
இனத்தில் உளவியலும் குறிப்பாகச் சொல்லப்படுகிறது. இன்றைக்கு இருக்கிறதோ இல்லையோ, எதிர்காலத்துக்கு
சேர்த்துவைப்பது ஒரு இனிய கட்டாயமாகவே ஆகிவிடுவதால், அந்தத் தூண்டிலைப் போடுவது
எல்லோருக்கும் வழக்கமாகிவிடுகிறது. மறுபிறப்புக்கு, இன்றைய மாற்றுக்குறளில்
ஏழ்பிறப்பு என்று சொல்லியகாரணம், வள்ளுவரே ஏழேழ் பிறப்பு என்று பிற குறள்களில்
சொல்லியிருப்பதால்தான்.
இன்றெனது குறள்:
கீழ்மையிலா இன்சொல்
உடையார்க்கு இப்பிறப்பும்
ஏழ்பிறப்பும் இன்பமே
தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam