ஜூன் 30, 2012

குறளின் குரல் - 80


29th  June, 2012
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
                       (குறள் 70: மக்கட்பேறு அதிகாரம்) 

Transliteration:
Magan thandhaikku AtRum udhavi ivanthandhai
ennOtRAnkol enum sol.

Magan  - the son
thandhaikku  - towards his father
AtRum udhavi – the duty to do
Ivanthandhai – his father
ennOtRAnkol  - what rare penance must he have done?
enum sol – the word as such.

A son’s duty is towards his father that was a catalyst as well as a support towards son’s progress, to live a life extraordinaire, exemplified by the conduct and glory, so that the society wonders what rare penanance must he have done to deserve such a son!

To deviate from the male-dominated thinking of vaLLuvar times, this verse should be gender neutral again, and generalized to mean children’s duty towards parents.

Though not directly linked to, but somewhat relevant, some thoughts here must be registered here. The current truth is that from politics to administration to art scene, in every facet of human life, we see the predominance of male centric thought. From the ancient times, the epics and literature wordwide have also adopted the same framework.

Though we have had poetesses of significant intellect and importance in existence, and have celebrated the feminine goddess as the embodiment of power (“Shakthi”) and the prime one, we have not risen from this abysmal attitude as a society.  We have to note that Maha Kavi Bharati was the first one, even to give a voice for this cause. Surprising it is to see, even though the women emancipation has come into vogue, at least in thoughts, we don’t see many coming forward to even register their thoughts against such age old practices.

A parallel fact is becoming clear. The slave mentality of over thousand years has mixed in Indian blood stream and most citizens don’t even have the backbone to stand up against and challenge the societal atrocities, violations committed against them, exploiting them in the name of politics, governance, religion, opportunities and many such things. Perhaps the women of the society that have been oppressed for ages, have it more in them to be subservient or at least for many more decades or centuries to come. Holistic societal emancipation may be a utopian dream!

But, at least I want to reflect the equality in my alteranate verses!

Son’s duty towards father is to live a person extraordinaire
For words as such ‘what did his father do? a penance rare!’

தமிழிலே:
மகன் – ஒரு மகன்
தந்தைக்கு – தன்னுடைய தந்தைக்கு
ஆற்றும் உதவி – செய்யக்கூடிய பெருங்கடமை
இவன்தந்தை – இவனுடைய தந்தை
என்நோற்றான் கொல் – என்ன அரிய தவம் செய்தானோ?
எனும் சொல் – என்று பிறர் பேசக்கூடிய அளவு உயர்ந்திருத்தல்

ஒரு மகன் தன்னைக் கல்வி கேள்விகளில் சிறந்து, வாழ்க்கையிலோர் உயர்ந்த இடத்தில் இருத்தலுக்கு ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்த தந்தைக்குச் செய்யக்கூடிய சிறந்த கடமையானது, இம்மகனுடைய தந்தை என்ன அரியதவங்கள் செய்திருப்பானோ என்று அறிஞரும் மற்றனைவரும் வியந்து பாராட்டும்படியாக வாழ்வதுதான்.

வள்ளுவர்கால ஆணாதிக்க சிந்தனை வழக்கினின்று ஒழுகாது, பொதுவாகக் கூற வேண்டுமென்றால், மக்கள் தங்கள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடனாகத்தான் இக்குறளை நாம் பொருள் கொள்ள வேண்டும்.

இக்குறளுக்கும் நேரடியாக இல்லாவிட்டாலும், ஓரளவு தொடர்புடைய, சிலவற்றை எழுதியே ஆகவேண்டும்.
நடப்பு உண்மை என்னவென்றால் அரசியல், நிர்வாக, கலை என்று எல்லா வாழ்க்கைத் துறைகளிலும்கூட ஆணாதிக்க சிந்தனைகளே இன்றும் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கின்றன. ஆணை முன்னிருத்திதான் கதைகளும், காவியங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்களே பெரும்பாலும் காவியங்களையும், வாழ்வியல் கோட்பாடுகளையும் படைத்திருக்கிறார்கள். 

உலகின் தொன்மையான இலக்கியங்களிலெல்லாம் கூட ஆண் மகனை முன்னிருத்தியே எழுதப்பட்டிருக்கின்றன. இத்துணைக்கும் பெருமைமிக்க பெண்பால் புலவர்கள் இருந்தாலும்கூட. சக்தியை இறைமுதல்வியாகக் கொண்டாடும் நம் சமூகத்தில்தான் இன்னும் இந்த இழிநிலை. இந்த சமத்துவத்துக்குக் கூட முதலில் குரல் கொடுத்தது பாரதி என்னும் மா கவிதான். பெரும்பாலும் பெண் சுதந்திரம் பேச்சளவிலாவது வந்துவிட்ட இன்றைய சூழலில்கூட, பெருமளவில் பெண்கள் யாரும் இதற்கு முன்வரவில்லை என்பதுதான் உண்மை. ஒரு இணை உண்மை புலனாகிறது. ஆயிரமாண்டுகளாக அடிமைப் பட்டுப் பழகிப்போன நம் மக்கள், மந்தை சிந்தனையில்தான் இன்றும், இன்னும் வாழ்கிறார்கள். சாதிப்பிரச்சினையை பெரிசாக ஊதி ஆதாயம் தேடும் அரசியலில் கூட, அதே அளவுக்கு பாதிப்பை உடைய இதற்கு தீர்வு காணும் மனம் இன்றும் இல்லை. இப்படியிருக்க, அடிமைபட்டுப் பழகிய பெண்களுக்கு, சுயசார்பும், சிந்தனையும் எப்படி விரைவில் வரமுடியும். காத்திருக்க வேண்டும்!.

ஆனாலும், மாற்றுக்குறள் எழுதுவதிலாவது, இக்கருத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சியே!

இன்றெனது குறள்(கள்):
செய்தவமென் இம்மக்கள் தம்தந்தை என்றுலகோர்
மெய்வியத்தல் மக்கள் கடன்

செய்தவமென் இம்மக்கள் தம்பெற்றோர் என்றுலகோர்
மெய்வியத்தல் மக்கள் கடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...