29th June, 2012
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
(குறள் 69: மக்கட்பேறு அதிகாரம்)
Transliteration:
IndRa pozhudhin periduvakkum thanmaganaich
chAndRon enakkEtta thAi
IndRa pozhudhin – More than the time of giving birth
periduvakkum – will be over joyous
thanmaganaich – her son
chAndRon – is known to be a learned and wise man and acknowledged so by
wisemen
enakkEtta - when she learns, when
she hears other wisemen thus speak
thAi – the mother
The ‘umbilical chord
relationship’ between a child and its mother until she delivers the child is
very special; though the chord is severed, the special bond lasts for the life
time. When a mother learns that her son
is in high position, or among the learned, or valiant, there is no bound to her
joy.
Tamil literary tradition
gives predominance to the bravery and valor; worships the valiant sons of the
soil. There are references about a mother severing her bosoms when she learns
that about her son’s cowardly act in the battle field, and was killed by
enemies’ stab on his back. Sangam work “puRa nAnUru” talks about a mother being
proud when she sees her dead son taking the enemies sword on his chest.
Though to make his son
wise and learned is the proverbial duty of a father, all the happiness of his
success is mother’s in most literary references and vaLLuvar is no exception to
that unwritten (now definitely unacceptable) posture; However it is justified
to show the glory of a mother-son special bond.
With the change of times
and the scenes both genders are equally capable in pursuit of knowledge; so are
in their responsibilities in the societal frame work of today. So,
opportunities are given to children of both genders and so the happiness is
also for both the parents. My verses today have been written to reflect
vaLLuvar as well as order of the day.
More than at the time of his birth, a mother rejoices
When she hears that her son is placed among wise
தமிழிலே:
ஈன்ற பொழுதின் – தான் தன் மகனை பெற்ற காலத்திலும்
பெரிதுவக்கும் - பெரிதாக மகிழ்வாள்
தன்மகனைச் - தன்னுடைய மகன்
சான்றோன்- கல்வி கேள்விகளில் சிறந்து, அறிஞர்களால் மதிக்கப்படுகிறவன்
எனக்கேட்ட – என்று அறிகிற, பிற அறிஞர்கள் சொல்லக் கேட்கின்ற
தாய் - தாயானவள்.
தாய்க்கும் குழவிக்குமான தொப்புள்கொடி உறவு முழுவதுமாக அன்பாலே
பிணைக்கப்பட உறவு. தன்னுடைய மகன் கற்றறிந்த பெரியவர்கள் நடுவே மதிக்கப்படுகிறான்,
உயர்ந்த பதவியில் இருக்கிறான், பெரிய வீரனாக இருக்கிறான் என்றெல்லாம் கேட்பதைவிட
ஒரு தாய்க்கு மகிழ்வான செய்தி வேறொன்றுமில்லை.
தமிழ் இலக்கியங்களிலே வீரத்துக்கு முதலிடம் கொடுத்து, மாண்டுபோன
தன்மகன் புறமுதுகு காட்டி, முதுகிலே வெட்டுபட்டு மாண்டான் என்றறிந்தால், ஒரு தாய்
அம்மகனுக்கு பால்கொடுத்த தன்னுடைய மார்பகங்களை அறுத்து எறிந்து மாண்டு போவாள் என்ற
காட்சிகள் வருகின்றன. அம்மகன் நெஞ்சிலே வாள்வாங்கி இறந்திருந்தால், “படுமகன்
கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே” என்கிறது புறநானூற்றுப் பாடல்
ஒன்று.
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனாயிருந்தாலும், உவகையெல்லாம்
தாய்க்கென்றது, தாய்-மகன் என்கிற உறவின் தனிப்பிணைப்பை காட்டுதற்கே. காலங்கள் மாறி, காட்சிகள் மாறி ஆண், பெண்
இருபாலரும் அறிவுப்பாதையில் இணையாக, சமமாகப் பயணிக்கும் இந்நாளிலே, இது
இருபாலருக்கும், பொதுவாக பெற்றோர்களுக்கும் பொருந்துமென்பதால், இக்குறளுக்கான எனது
குறள் விளக்கமும் இருகருத்திலேயும் எழுதப்பட்டுள்ளது.
இன்றெனது குறள்(கள்):
பெற்றவக் காலையின் பேருவகை தாயடைவாள்
கற்றவன் தம்மகன்னென் றின்
பெற்றவக் காலையின் பேருவகை
பெற்றோர்க்கு
கற்றோர்தம் மக்களென்ற றின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam