6th
June, 2012
இயல்பினான்
இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள்
எல்லாம் தலை.
(குறள் 47: இல்வாழ்க்கை
அதிகாரம்)
Transliteration:
iyabinAn
ilvAzhkkai vAzhbavan enbAn
muyalvAruL
ellAm thalai.
iyabinAn - stays with the guiding principles prescribed
ilvAzhkkai - the life of householder
vAzhbavan
enbAn – that who lives ( the life of householder)
muyalvAruL
ellAm - those who seek
and try other ways of (perhaps to get bliss or reach godhead)
thalai – ahead and
above.
Those house-holders that live adhering to the
virtues of family life, are above and ahead of others who try through other
ways (meaning the other three ways in general) without being qualified for
those chosen paths.
We can assume that the other paths or ways
mean the pursuit of knowledge through academics (without understanding the
purpose of that pursuit), premature retired life (even before completing their
duties in life during productive years) and the pursuit of understanding the nature of
Godhead by the “want to be ascetics”.
The commentary of Parimelazhagar implies vAnaprasthA’s
as the people who “try to reach God head” in general sense, without clearly
saying why. Perhaps, he also meant that the ones that take vAnaprasthA without
fulfilling the duties in the previous paths. vaLLuvar could not have intended
an unfitting comparison for sure.
The word “iyalbinAn” implies the one who
stands by the path ordained for his/her present stage of life. In the same
context, vaLLuvar must have meant others that do not stand by the path of their
present stage in life.
“Holder of
family life with its intrinsic virtues adhered
Is ahead and above that endeavor other ways
instead
தமிழிலே:
இயல்பினான் - வகுப்பட்ட
வழி நெறிகளோடு (இல்லறத்துக்குரிய – பின்னே சொல்வது)
இல்வாழ்க்கை – இல்லற வாழ்க்கை
வாழ்பவன் என்பான் – சிறப்புற
வாழ்கின்றவர் (அத்தகைய வாழ்க்கையை வகுக்கப்பட்ட நெறிகளின் படி)
முயல்வாருள்
எல்லாம் – மற்ற அறவழிகளை நினைந்து, முயன்று பார்ப்போருக்கெல்லாம் (எதற்கு
என்றால், நிலைத்த மகிழ்வுக்கும், இறைபொருளை அடைதற்குமாய் இருத்தல் வேண்டும்)
தலை – மேலானவர்,
முதலான வர்
இல்லறவாழ்க்கையின் இயல்பினை ஒட்டி, அதை வாழ்தற்குரிய
நெறிகளோடு வாழ்கின்ற இல்லறதார், மற்ற அறங்களின் வழியாக வீட்டுப்பேற்றினையோ, இறைப்பொருளையோ
அடைய முயலுகின்றவர்களை விட மேலானவர்.
இதில் மற்ற அறங்கள் என்று குறிப்பிடுவது, கல்வி
கற்கும் நிலையிலுள்ளவர், மற்றும் துறந்தோர்தாம். வானப்ரஸ்தர் அல்லது கானேகிகள், வாழ்விறுதிக்
கட்டத்தில் இருப்பவர்கள், வாழ்ந்து முடிந்தவர்கள். அவர்களைப் பற்றி சொல்லியிருக்க வாய்ப்பில்லை.
கல்வி வழி மட்டும் நிலையான மகிழ்வும், இறைப்பொருளை
சென்றடைதலும் இயலாது. துறந்தார் ஏற்கனவே இறைப்பொருளின் தன்மையை அறிந்தவர்கள். கடமைகளைத் துறந்து, துறவறம் மேற்கொண்டு இறைப்பொருளையோ,
வீட்டுப்பேற்றையோ அடைய எண்ணுபவர்கள், இதற்கு முந்தைய குறளில் சொல்லியவாறு, உண்மைத்துறவினை
அறியாதவர்கள். அவர்களைக் குறித்தே, சென்ற குறளில்
தொடர்ச்சியாக இக்கருத்தும் சொல்லப்பட்டது.
பரிமேலழகர் உரையில், “முயல்வார்” என்பார் “வானப்ரஸ்தர்”
என்ற பொருள் படுமாறு “மூன்றாம் நிலையில் நின்றாரை” என்று கூறியிருப்பார். அவ்வாறு வாழ்ந்து
முடிந்தவர்களான கானேகிக் காலன்வழிப் பார்த்திருப்போரை குறித்திருந்தால் அது பொருந்தாத
ஒப்பு நோக்குமை. வள்ளுவர் அக்குற்றத்தினை செய்திருக்கமாட்டார் என்று நம்புவோமாக.
“இயல்பினான்” என்று தொடங்கி இல்லறத்தரைச் சிறப்பிப்பதால்,
தங்களுக்குரிய ஒழுகக நெறிகளில் நில்லாது,
தங்கள் அறத்தைத் தவிர்த்து, தங்கள் தகுதிக்குப் பொருத்தமில்லா அறத்தை முயன்று பார்ப்பவர்களை,
தடுமாறிய அறிவுடையவர்களைக் குறித்தே சொல்லியிருக்க வேண்டும்.
இன்றெனது குறள்:
தன்னறமாய் இல்வாழ் விருப்பாரே மற்றறத்தை
உன்னுவார் தாமவற்கும் முன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam