7th
June, 2012
ஆற்றின் ஒழுக்கி
அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின்
நோன்மை உடைத்து.
(குறள் 48: இல்வாழ்க்கை
அதிகாரம்)
Transliteration:
AtRin
ozhukki aRanizhukkA ilvAzhkkai
nORpArin
nOnmai uDaiththu
AtRin - Ethical code (of householders)
ozhukki – helping
others to abide by
aRanizhukkA –
Without deviating form the path of ethical (Abiding by the ethical path of family
life)
ilvAzhkkai – family
life
nORpArin – Who do
penance (ascetics)
nOnmai – glory and
greatness of penance (penance of ascetics)
uDaiththu - having
the same (glory and greatness)
In the first verse
of this chapter, vaLLuvar has already said that, to sustain those in other
three paths and pursuits, householders must support them. In this verse, he
asserts that by doing so and also following the duties of householder without
imperfections, a household is as glorious and great as the penance of ascetics.
Once again, in the commentary of Parimelazhagar, he has compared the “flawless household” to the greateness of those who do penance, which is not a proper comparison. Comparison of "a living path with with its attributes" to "a person" is never done. vaLLuvar would not have intended such a faulty comparison too. It is very straightforward indeed; reading his verse, it is very obvious that his comparison is between the “flawless household” and the “penance of ascetics”.
These comparisons abound in everyday life. It is said that more than establishing thousands of free-food places and performing rituals of holy-fire, pouring gallons of ghee everyday, it is better to educate one poor deserving student. Such sayings don’t reprove the rituals or such benevolence, but stress the importance of supporting a poor deserving student in his educational pursuits. Such is the comparsion in this verse too!

Helping for
eithical living and to abide by same blemishless,
A Houshold
placed at par with ascetic’s penance – not less.
தமிழிலே:
ஆற்றின் – விதிக்கப்பட்ட
நெறிகளின் படி (ஆற்று – வழி, ஆற்றுப்படுத்துதல் – வழிகாட்டுதல்)
ஒழுக்கி - மற்ற அறத்தவர்களையும்
அவரவர் நெறி நிற்க உதவி (தானும் தன்னுடைய இல்லற நெறி நின்று)
அறனிழுக்கா –அறநெறிகளில்
தானும் பிழையாது நின்று (இல்லறதாருக்கான)
இல்வாழ்க்கை – நடத்தும்
இல்லறம்
நோற்பாரின் - தவமியற்றுபவர்களின்
நோன்மை – தவச்சிறப்பின்
தன்மையை
உடைத்து – உடையது.
முதற்குறளிலேயே சொல்லப்பட்டது: மூவறத்தில் இருப்பவர்களை
அவரவர் ஒழுக்க நெறிகளின்படி இருக்கச்செய்வது, இல்லறத்தோரின் துணையே என்று. அப்படி அவரவர்
நெறிகளில் இருக்கத் துணைநின்று, தாமும் இல்லற நெறி பிழையாத இல்லறம், தவமியற்றுபவர்கள்
செய்யும் தவத்தின் சிறப்பை உடையது.
“நோர்ப்பாரின்” என்ற சொல்லின் “இன்” விகுதியை, தவமியற்றுபவரின்
தவச்சிறப்பை விட என்று பொருள் செய்துள்ளார் பரிமேலழகர். அது, “நெறிப்படி
செய்யப்படும் இல்லறம் தவமியற்றுபவர்களையும் விட தவப்பெருமை வாய்ந்தது” என்று ஆகிவிடும்.
“நோர்ப்பார்” என்று தவசிகளையும், இல்வாழ்க்கையயும்
ஒப்பு நோக்கிப் பேசுதல் உயர்திணைக்கு, அஃறிணையை ஓப்பு நோக்கலாகும். “அறனிழுக்கா இல்வாழ்க்கை”
என்பது வாழும் முறை. அதை முன்சொன்னவிதமாக தவத்தோரோடு ஒப்பு நோக்கமுடியாது.
வள்ளுவரும் அது போல சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.
“நோர்ப்பாரின் நோன்மை உடைத்து” என்று சொல்லும் போது, “தவமியற்றுபவர்களின் தவச்சிறப்பினை
உடையது, ஒத்தது” என்றே பொருள் கொள்ளமுடியும். அதாவது தவச்சிறப்பை, பிழையா இல்லறத்தோடு
ஒப்பு நோக்குதை சரியாகும். இல்லறத்தின் சிறப்பையும் உயர்வாகச் சொல்வதாகவும் இருக்கும்.
இன்றெனது குறள்:
மூவறத்தார்
தம்மறத்தில் கோதறசெய் இல்லறமே
மாதவத்தார்
செய்தவத்தின் மேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam