மே 09, 2012

குறளின் குரல் - 31


May 9th, 2012

தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
                                      (குறள் 19: வான்சிறப்பு அதிகாரம்)

Transliteration:
dhAnam thavam iraNDum thangA viyan ulagam
vAnam vazhangAdhenin

dhAnam  - charity
thavam - penance
iraNDum = the two (are like two eyes in everyones life)
thangA  - won’t last in this world
viyan  ulagam – in this vast world
vAnam – skies (clouds)
vazhangAdhenin – dry up and won’t give its seasonal pours.

In the last verse, vaLLuvar mentioned about absence of celebrations and offerings to Gods by people of the world. In this verse, he talks about the two important duties of everyone born in this world. Charity is taking care of people that don’t have by people of plenty. It can be in kind or by deeds. It is an essential ingredient of human goodness, value system – an act of kindness without expecting anything in return.

Skies bless us with their charity by showering their seasonal pours, not expecting anything in return. So, they serve as an example to people of this world to do and show how, that charity creates an all around happiness to every living soul of the world. So, if the chairity becomes a rarity or even stop for any reason, the very model code of charity is not there for us to follow!

Penance is simply not going away to a far off forest and sitting in a place, closing eyes, and praying to God for some personal selfish goals. Our mythology has ample evidences in demonic characters that have sought boons to create menace and finally perish because of their own ill-deeds. Penance is just being focused and to pray Godhead for the goodness to prevail on this earth. Great souls have done exactly that and their prayers include “sarvE janAh sukhino bhavantu” (எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவதன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே). As a popular saying goes, even if there is a single great good soul there on this earth, everyone will have the benefits of rains because of them. (நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை).

Again there is an implied warning, to all of us that these important two virtues will perish if rains fail us. Whose lose can it be? Subtle insistence of following the virtuous path for these interlinked things to happen without interruption.

“World will witness charity and penance perish
Should giving of the skies be a rarity or just finish”

தமிழிலே:

தானம்  -  வள்ளன்மையும் (கொடையும்)
தவம்  - குறிக்கோளோடு கூடிய ஒரு முகச் சிந்தனையுடனான இறை நினைவு
இரண்டும் – இவை இரண்டுமே (தானமும் தவமும் ஒவ்வொருவருக்கும் இரண்டு கண்களானவை)
தங்கா  -  இருக்காது, மறைந்து போகும்
வியன் உலகம் – இவ்விரிந்து பரந்த உலகம்
வானம் – வானின்று பொழியும் மேகங்கள்
வழங்காதெனின் – பெய்யாமல் போனால்

சென்ற குறளில், சிறப்பான வழிபாடுகளும், படையல்களும், வானோர்க்கும், உலகத்தோரால் இல்லாமல் போகும் என்று வள்ளுவர் கூறியிருந்தார். இந்தக் குறளில், உலகில் பிறந்தோர் ஒவ்வொருவருக்குமான இரண்டு மிகவும் முக்கியமான கடமைகளைப் பற்றிப் பேசி, அவையுமே கூட மழையின்மையால் ஒழிந்துபோகும் என்று கூறுகிறார். தானம், அல்லது கொடை என்பது இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள், பொருளாகவோ, செயல் உதவியாகவோ செய்வது. மனித நற்குணத்துக்கான, பண்பிற்கான அவசியமான மூலப்பொருள் – எதிர்பலனை எதிர்நோக்காத கருணையின் வெளிப்பாடு. (தானம் – தமிழ்ச் சொல்தானா?)

வானமானது ஆண்டுதோறும் தனது பருவகால கொடையாம் மழையை எந்தவொரு எதிர்நோக்குமில்லாது பொழிகிறது. எனவே அதுவே கொடைத்தன்மைக்கு, வள்ளன்மைக்கு உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதோடு, அந்த வள்ளன்மையால், உலகுயிர்களுக்கு எப்படி பலவழிகளிலும் மகிழ்ச்சி உண்டாகிறது என்பதையும் தெளிவுறுத்துகிறது. எனவே வள்ளன்மையின் சிறப்பை, அது ஏற்படுத்தும் மகிழ்வை உலகுக்கு எடுத்துக்காட்டாகவே இருந்து காட்டுகிறது

தவமென்பது, வீட்டைத் துறந்து, நாட்டைத் துறந்து, காட்டில் சென்று கண்மூடி கடவுளரை வேண்டி தன் சுய உயர்வுக்குக்காகவோ, நலத்துக்காகவோ வேண்டுவதல்ல. உலகநன்மைக்கு வேண்டுவதே தவத்தின் முக்கிய நோக்கம். நம் புராணங்களும், இதிகாசங்களும் மீண்டும் மீண்டும் நமக்கு வலியுறுத்துவதும் அதுவேதான். அசுரர்களாக சித்தரிக்கப்பட்ட பலரும் தவத்தில் சிறந்தவர்கள், ஆனால் சுயநலமிகள், அதனால் தவத்தினாலே வரங்கள் பெற்று, தலைக்கனமேறி, தவறான செயல்கள் செய்து, அவற்றாலேயே அழிந்தார்கள். உன்னதமானவர்கள் உலகத்தின் நன்மைக்கே வேண்டுவார்கள், அவர்கள் தவமும் அதற்காகவே! ‘எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவதன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே’ என்பதே சித்தர்களும் முத்தர்களும் வேண்டியது. ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இங்கும் ஒரு மறைமுக எச்சரிக்கை!  மழைப் பொய்த்தால், தானமும் தவமும் சுருங்கி, மறைந்து விடும், அதனால் உலகின் நல்லவை தேய்ந்து அல்லவை பெருகும்.  ஆதனால் மழைக்கு குறைவு வாராமல் நாம் நிலத்தில் அறவாழ்வை மேற்கொண்டால்,  ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள எல்லாமே சரிவர இயங்கும் என்பதே வள்ளுவர் உணர்த்தும் கருத்து.

இன்றெனது குறள்:
அறமாம் கொடையும் தவமும் உலகில்
அறும்வான் கொடைதான் கெடின்

1 கருத்து:

  1. Nice analysis. Enjoyed reading this page esp. the other references "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை"

    பதிலளிநீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...