May 6th,
2012
விசும்பின்
துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல்
தலைகாண் பரிது.
(குறள்
16: வான்சிறப்பு அதிகாரம்)
Transliteration:
visumbin thuLi
vIshin allAl maTRAngE
pasumpul thalai
kANbadharidhu
visumbin – skies,
clouds
thuLi - rain drops
vIshin
allAl matRu – if don’t fall
(rain drops)
AngE – there (in
the world)
pasumpul – the young
green grass (it is said in the tone of “not even grass)
thalai – sprout
kANbaridhu – rare
to see
In this verse, vaLLuvar declares that without
the rain drops (many a drops make a mega flood) even the lowest form of living
form, a grass (the lowest of life form with only one sense) will not sprout on
this earth. There is a common thought in Manikkavasagar’s Sivapuranam, where he
says, “pullAgi, poodAi puzhuvAi maramAgi and gives the order of life forms in
the increasing number of senses or functional utility.
The implied meaning is that when it is difficult even to see the one-sensed grass to sprout without the rains from skies (clouds), it is not possible for other forms of life to blossom and thrive without rain.
“If no
droplets of the clouds fall on this earth
Even the tiny grass buds won’t have their
birth”
தமிழிலே:
விசும்பின் - வானம் அல்லது வானத்தில் உலவும் மேகக் கூட்டம்
துளி – மழைத் துளிகள்
வீழின் அல்லால்
மற்று – விழவில்லையானால் ( எங்கு - பூமி)
ஆங்கே – அவ்விடத்தில்
(பூமியின்கண்)
பசும்புல் – பசுமையான
இளம் புல் ( புல் கூட என்கிற பொருளில் சொல்லப்பட்டது)
தலை - முளைத்தெழுவதை
காண்பரிது. – பார்ப்பதற்கு
மிகவும் அரிது, கடினம்.
இந்த குறளில், வள்ளுவர், வானுலவும் மேகக்கூட்டங்களிலிருந்து
மழைத்துளிகள் பூமியில் விழவில்லையானால், பசும் புல்கூட முளைப்பதை காண்பது கடினம் என்று
உறுதியாகக் கூறுகிறார்.
ஓரறிவு புல்லுக்கே இது கடினம் என்றால், ஓரறிவுக்கு
மேலான உயிர்களுக்கு இது சாத்தியமில்லை என்பதை உள்ளுரையாக வைத்துக் கூறுகிறார் என்று
கொள்ளலாம்.
“துளி” என்றது மழையானது துளித்துளியாக வீழ்வதினால். “பல துளி பெருவெள்ளம்” என்பதனால், சிறுதுளிகள் சேர்ந்தே,
பயிர்களும் உயிர்களும் தழைக்க நீர்நிலைகள் ஏற்படுகின்றன் என்பதாலும் கூறியிருக்கலாம்
.
மாணிக்க வாசகரும் சிவபுராணத்தில் கூறும் போது, ‘புல்லாகி,
பூடாகி, புழுவாகி மரமாகிப் பல்விருகமாகி பறவையாய் பாம்பாய்” என்று வரிசை வைத்து கூறுவார்.
வரிசை முறையில் இந்த குறளின் இடப்பொருத்தம் சற்று
கேள்விக்குறியது. முந்தைய குறளில் பொய்த்து கெடுக்க வல்ல மழையே பின்பு பெய்து வாழவைத்து
உயர்த்தவும் வல்லது என்று சொல்லிவிட்டு, இக்குறளில் மழை பெய்யாது போனால் புல் கூட முளைக்காது
என்று சொன்னதன் காரணம் விளங்கவில்லை. உயர்த்தவும்
வல்லது என்றதினாலேயே, உயர்த்தியிருக்கிறது, பின்னும் உயர்த்தும் என்ற பொருள் வருவதால்,
நெடுங்காலம் பெய்யாமல் பொய்க்க வழியே இல்லை.
வேண்டுமானால், வரட்சிகாலங்களைப் பற்றி குறிப்பதற்காக
எழுதப்பட்ட குறளாகக் கொள்ளலாம்.
இன்றெனது குறள்:
தளிர்க்கா
பசும்புல்லும் வையத்தில் வானம்
தெளிக்கா தொழியுமெ
னின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam