மே 05, 2012

குறளின் குரல் - 27


May 5th, 2012

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
                                         (குறள் 15: வான்சிறப்பு அதிகாரம்)

Transliteration:
keDuppadhu-um keTTArkku sArvAi  maTRAngE
eDuppadhu-um ellAm mazhai
keDuppadhu-um – Ruining the lives of people (that depend on rains)
keTTArkku – to the ruined people
sArvAi maTRu  - in support of them (ruined people)
AngE - there
eDuppadhu-um – Lifts them up (by pouring sufficiently)
ellAm – everything is
mazhai – rains.

The tone of this verse seems general and is applicable to every living being of the world, but more so to the farmers of the world if we see in the context of adjacency to the previous verse.

vaLLuvar now attributes some kind of free will and thinking capacity to rains as if they act on their own will. Rains can completely deceive the rain seeking world without its seasonal bounty, and can also in support of the same, pour in abundance to help the rain seeking world to uplift the people affected by its failing them.

Reputed Parimelazhagar, one of the early commentators of kuraL, explicity says that this verse talks about the ability and capacity of rains to act on its own. It could simply a poetic imagination and figure of speech in his verse. 

Though the word “eduppadu-um” (எடுப்பதூஉம்) rhymes with “keduppadhu-um” (கெடுப்பதூஉம்), I was thinking vaLLuvar could have used “koduppadhu-um” (கொடுப்பதூஉம்) meaning it can also “give”. A little more looking into vaLLuvar’s mind, it became obvious that the word “eduppadu-um” fits in nicely to mean, “up-lifting”. It makes only sense to uplift somebody who has been affected by the voluntary or involuntary action of a person, thus according an all powerful status to rains, especially with the usage of the word “ellAm” (எல்லாம்) which implies that.

This verse also confirms, in a very subtle way, the belief of vaLLuvar in the power of nature to govern the world by attributing an all powerful status to “rains”, elevating it to some sort of Godhood.

“Not giving its plenty, rain can set the world in ruins,
 Yet, all powerful to lift the same by its bountiful rains”

தமிழிலே:

கெடுப்பதூஉம் – பெய்யாமல் பொய்த்து உலகுள்ளோரை இடருக்குள்ளாக்குவதும்
கெட்டார்க்குச் – அவ்வாறு இடரினால் துன்பப்படுகிறவர்களுக்கு
சார்வாய் மற்று – ஆறுதலாய், துணையாக
ஆங்கே – அதே போன்று,
எடுப்பதூஉம் – மழையை வாழக்கொடுத்து, அவர்களை உயர்த்தி வைப்பதும்
எல்லாம் – ஆகிய எல்லா ஆற்றலும், முழு கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படுகிற
மழை – திறனுள்ள மழையென்னும் இயற்கைத் திறன், சக்தி.

இந்த குறளின் குரல் உலகுள்ளோர் எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்டதாக கருத இடம் தந்தாலும், குறிப்பாக உழவர்பெருமக்களாம் விவசாயிகளுக்கே சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளலாம், முந்தைய குறளின் தொடர்பாகப் பார்க்கும் போது.

மழைக்கு ஒரு சுதந்திரமான அறிவு சார்ந்த நிலையை வழங்கி, அது பெய்வதும், பெய்யாதொழிப்பதும், அதனுடைய விருப்பத்திலும் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக உருவகித்து, எழுதியிருக்கிறார் வள்ளுவர்.
பெய்யாமல் அதனால் வரும் இடர்பாடுகளுக்கு எல்லோரையும் ஆட்படுத்துவதும், அவ்வாறு இடர்பாடுகளுக்கு உள்ளானவர்களை பிறிதொரு நேரம் பெய்து வாழவைப்பதும், எல்லாமே மழை என்று கூறி, முழு வல்லமையையும் மழையின் மேலேற்றிக் கூறியுள்ளதிலே இது விளங்கும்.

குறிப்பாக “எல்லாம்” என்ற சொல் அந்த முழு உரிமை, அல்லது கட்டுப்பாடு இவற்றை மழையின் அதிகார வரம்புக்குள்ளாக்குகிறது.

கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் போன்ற சொற்கள் ஒசை நயத்தோடு, கவனமான சொல்லாடலும் புலப்படுகிறது. எடுப்பதூஉம் என்றதற்கு பதிலாக, கொடுப்பதூஉம் என்று சொல்லியிருந்தால் கூட கவிதையின் அழகும், பொருளும் அவ்வளவாக மாறியிருக்காது. ஆனால் எடுப்பதூஉம் என்றதாலேயே கொடுத்து உயர்த்துவதை ஒரே சொல்லிலேயே அழகுற சொல்லிவிட்டார் வள்ளுவர்.

தவிர வள்ளுவரின் இறை நம்பிக்கையைப் பற்றி உறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும், அவர் இயற்கையின் வல்லமையில் முழுநம்பிக்கைக் கொண்டிருந்தார் என்று இக்குறளின் மூலம் உறுதியாகிறது. இல்லையெனின், “எல்லாம்” என்கிற முழுக்கட்டுப்பாடு அளிக்கும் சொல்லை வெறும் சொல்லழகுக்காக சேர்த்திருப்பாரா?

இன்றெனது குறள்:
பொய்த்திடர் செய்மழையே பெய்தவரை வாழ்விக்கும்
செய்த்திறனும் கொண்டதன் றோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...