April 13th , 2012
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
(குறள் 34: அறன்வலியுறுத்தல்
அதிகாரம்)
Transliteration:
manaththukkaN mAsilanAdhal anaiththaRan
Akula nIra piRa
manaththukkaN – in the mind
(or mind with heart)
mAsilan – blemish
free (devoid of ill thoughts about anything or anybody)
Adhal – Being that
way
anaiththaRan – is all
encompassing Dharma
Akula – show of pomp
and vain glorious act
nIra – the type
and its ways ( guNam – குணம்)
piRa – other put
on acts.
Today’s verse extols the virtue of
mind devoid of ill thoughts and touches at the root of humanity. If every human
being is devoid of ill thoughts in their mind, then that’s the highest form of
Dharma. One of the struggles of translating works written in a different language
is to find the exact word equivalent of the original language words in the
language the work is translated to. Without being biased, I have had difficulty
doing this work in both directions. “manas”, “manam”, “manadhu” (மனஸ், மனம்,
மனது) is a very Indian word which talks about the discerning intellect which is
a brain function but, connected to heart always. Intellect and heart are
partners when "manadhu" is involved.
“Mind” is not exactly the same as it
does not have the heart component as we all have used it. Mind can rationalize almost anything
and everything, where as manas or manadhu takes heart to count also. Mind can
give punishment to a crime committed where as heart can add compassion to the
equation and forgive and forget the crime, give an opportunity to correct. Is
there an equivalent word for this in any other non-Indian languages? We hear compassionate soul or heart, but not mind, though some
dictionaries seem to imply a “feeling” component which is somewhat heart
related.
This kuraL says that highest form of
all encompassing “Dharma” is to have a “manadhu” (nearest equivalent being
mind!) which does strive to be devoid of any ill thoughts. Other forms are all
just a show of pomp in vain.
Blemishless
minds extolled as the highest Dharma
Others
forms are all acts of show and bad karma
(மே மாதம் 24, 2012 அன்று தமிழுரை எழுதப்பட்டு சேர்க்கப்பட்டது)
தமிழிலே:
மனத்துக்கண் - மனதளவில் (நெஞ்சமும், அறிவும்
கலந்தது)
மாசிலன் – குற்றமில்லாதவன், அழுக்கில்லாதவன்
ஆதல் – ஆக இருத்தல்
அனைத்தறன் – எல்லா அறச்செயல்களின் மொத்த வெளிப்பாடாம்
ஆகுல – ஆரவாரத் தன்மையும், வெளிப்பகட்டுமான
நீர பிற – குணத்தவை மற்றைய வெளிப்பாடுகள் (அறமுடையவரைப் போல் காட்டிக்கொள்ளல்)
இன்றைய குறள் மனத்தின் கண் அழுக்காறு,
அவா, வெகுளி போன்ற அழுக்கான எண்ணங்கள் அற்று இருத்தலின் உயர்ச்சியைப் பற்றி
பேசுவதோடு, மனிதத்தன்மையின் அடிவேரைத் தொடுகிறது. எல்லோருமே மன அழுக்குகளை நீக்கி
இருந்துவிட்டால், அதைவிட உயர்ந்த தருமம் எதுவாக இருக்கமுடியும்.
மனம் என்பது, முழுவதுமே உணர்வு
பூர்வமானதல்ல, முழுவதுமே அறிவு சார்ந்ததல்ல. இவை இரண்டின் சரிவிகிதக் கலப்பே. மனம் என்பதன் ஆங்கில மொழி பெயர்ப்பு, (மைண்ட் –
mind). அது அறிவுபுலத்தைச் சார்ந்ததாகவே
இருக்கிறது. “மைண்ட்” எதையும்
சீர்தூக்கிப் பார்த்து அறிவுக்கு ஒவ்வாதவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. இதயத்தின்
தாக்கம் அதை பாதிக்கக்கூடாது. மனம் என்பது முழுக்க முழுக்க இந்தியதுணைக்
கண்டத்தின் சொல்.
இக்குறள், அறத்தின் மற்றொரு
பரிமாணத்தைத் தொடுகிறது. இதைச் செய்வதே அறம் என்று சொல்வதோடு, இவையெல்லாம்
இல்லாமல் இருந்தாலே அறம் என்பது, விலக்கைச் சொல்லி விதியை தெரிவிக்கும் முறை. அறத்தை
விட மேன்மை தருவது வேறில்லை, அதிலிருந்து விலகியிருப்பது போல கேடு வேறில்லை, இயன்ற
வகைகளின், இயலும் அக , புற கரணங்களால், அறன் செய்யவேண்டும் என்று முதல் மூன்று
குறள்களில் கூறிய பிறகு, அறம் என்னவென்ற கேள்வி எழுபவர்களுக்கு, சொல்லப்பட்டது
இது.
மனதளவில் ஏற்படும் அழுக்குகளாவன, உணர்வில்லாத
அறிவும், அறிவில்லாத உணர்வும் கொள்ளுதல், மனத்திலே பொறாமை, வேண்டாத ஆசை,
காரணமில்லாத கோபம், மற்றவர்களைக் கெடுக்க நினைக்கும், ஏமாற்ற நினைக்கும் எண்ணங்கள்
போன்றவையாம். இவைகள் இல்லாமல் இருந்தாலே
அறத்தின் வழியில் வாழுதல் என்று அமையுமாம், மற்றவையெல்லாம் ஆராவாரமான
போலித்தனங்களின் வெளிப்பாடுகளே. ஊர் மெச்ச செய்யும் தானங்களும், உலகுக்காகப்
போடும் அறநெறி வேடங்களும் அத்தன்மையன. ஔவை சொன்னது போல, “அறம் செய்ய
விரும்பவேண்டும்” அவ்விருப்பம் மனம் என்னும் கருவியால் செய்யப்படவேண்டும்.
இன்றெனது குறள்:
மனமலம் அற்றவர்தாம் மாநிலமே போற்றும்
அறவோராம்
மற்றோர் இலர்.
manamalam aRRavarthAm mAnilamE pORRum
aRavOrAm maRROr ilar
manamalam aRRavarthAm mAnilamE pORRum
aRavOrAm maRROr ilar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam