நிச்சயமாக, தமிழ் மொழி, பரந்த அண்டம் உள்ளளவும் வாழும் என்பதில் ஐயமில்லை! ஆனால், அது என்ன “மெல்ல” வாழும்…? மெல்லத் தமிழினி சாகும் என்னும் சலிப்பைவிட இந்த நம்பிக்கை, மகிழ்ச்சிகரமானதுதான்! உற்சாகத்தினை அளிப்பதுதான், ஊக்கத்தைத் தருவதுதான். ஆனால், “மெல்ல அல்லது மெள்ள” என்பதன் பொருள் என்ன என்பதைத் தெரிந்துதான் சொல்லியிருக்கிறார்களா?
சைவ சித்தாந்தப் பதிப்பகத்தின், தமிழ் மொழியகராதி (கதிரைவேற் பிள்ளை தொகுத்தது), “மெல்ல” அல்லது “மெள்ள” என்ற சொற்களுக்கு “மிருதுவான” என்னும் பொருளையே கொடுத்துள்ளது. “மிருதுவான” என்கிற சொல் கூட சமஸ்க்ருத மொழி சொல் “ம்ருது” வின் தமிழாக்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இச்சொல்லே திரிந்து தமிழிலே “மெது” என்னும் சொல்லாக ஆளப்படுவதும் உண்டு.
“மெதுவடை” தெரியாதவர்கள் இருக்கமுடியுமா? அல்லது மெல்லியலரைத் தெரியாத கவிஞரும் உண்டா? பெண்டிரை மெல்லினம் என்றதும், அவர்கள் பொதுவாக, மிருதுவானர்கள் என்பதால் தானே? மெது உணவுகளை மென்று தின்பதும், கமர்கட்டு, சீடை, முறுக்குகளையும் கடித்துத் தின்பதும் நாம் அறிந்ததுதானே…
ஆங்கில வார்த்தைகளான “Soft” (ஸாஃப்ட்), “Slow” (ஸ்லோ), இவற்றுக்கிடையே உள்ள வேற்றுமைகூட தெரியாத அளவில்தான் நம்முடைய சொல்லாட்சி இருக்கிறது.
“பைய” சொல் மாற்றாக இருக்குமோ என்றும் பார்த்தேன். இல்லை! அச்சொல்லும், “மெல்ல” என்ற பொருளையே கொண்டுள்ளது. “மந்தம்” என்னும் சொல்லே ஓரளவுக்கு பொருந்திவரும் போல தோன்றுகிறது.
வேகமாக உலுக்கும் சண்ட மாருதத்திற்கு பதிலாக, மந்தமாக வீசும் மாருதம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், மந்தம் என்னும் சொல்லில், “சோம்பல்” வாடை வீசுகிறதே..! சே..! தமிழில் சொல்லறிவு அதிகம் இல்லாமைக்கு வெட்கப்படுகிறேன்..
தமிழ் மெல்ல வாழ்வதைவிட வலிவுடன் வாழ்வதையே விரும்புகிறேன்!
ஆனால் மாற்றுச் சொல் தெரியாத வரை, “மெல்ல அல்லது மெள்ள” என்றுதான் எழுதவேண்டியிருக்கும். மெல்ல, மெதுவாக, மெள்ள எல்லாம் மாறும்வரை.
ஆனால், பொது மக்கள் வழக்கிலே, புழக்கத்துக்கு வந்துவிட்ட, ‘அஸால்ட்”, “பின்னி பெடல் எடுத்தல்”, “ஃப்லீங்”, “தோடா”, போன்ற, பிரபல ஊடகங்களின் ஊக்கதோடு தினமும் அரங்கேறும் மொழி அத்துமீறல்களை விட இவை ஒத்துக்கொள்ளக் கூடியவையே
தமிழில் எழுத எத்தனையோ செய்திகளும், பொருள்களும் உள்ளன. இன்று முதல், தினமும் எழுத விருப்பம்.. இறைவன் திருவுளம் எப்படியோ…!
What defines Mozhi athumeeral? Don't you think Mozhi athumeeral started when we started using words from Sanskrit in Tamizh? How many sentences in a day can you or any of us speak without using a single word that can be traced back to a language other than Tamizh? Even worse, without a dictionary like the one you have mentioned, how many of us can actually identify the root of a word or whether or not a word is actually a Tamizh word?
பதிலளிநீக்குA friend and I tried this interesting exercise. We resolved to converse in Tamizh without using any English words for an hour. We decided on an hour to keep it realistic. The idea was not to speak in chaste tamizh, but to see if we could do without introducing English words at least. We simply could not carry on for more than 10 minutes. Phrases like 'try panren', 'use panren', 'office poren' have started sounding like Tamizh.
In fact I sometimes think that if we manage to build a time travel machine and travel back to 100-200 years in time, none of us would be able to manage with the 'Tamizh' we know. Imagine the reverse. If someone from those times traveled forward in time, he/she would certainly think an alien attacked and took over the nation after his/her times.
On this subject, I agree with late writer Sujatha, that instead of lamenting on the usage of English words in conversation, it is better to find good tamizh alternatives for those words. I remember reading a particular usage in some story by Sujatha - Avan tholaipesinaan - when he meant that the person spoke on the telephone. I have a friend who regularly uses 'Muyarchi' instead of try, 'Vaaippu' instead of chance etc., and as you might have guessed his mother tongue is not tamizh!
P.S: The comment is in English for two reasons - I did not know how to type it in Tamizh and also my writing speed in tamizh is pathetic.
மொழி ஒரு கருத்து பறிமாற்ற சாதனம்தான்! அதனாலே, கருத்து அடுத்தவரைச் சென்று அடையும் வகையிலே சொல்லப்படுகிற எதுவும் மொழியின் ஆளுமைக்குள் வந்துவிட்ட ஒன்று என்பது பொதுக்கருத்து. எல்லோரும் ஒத்துச்செல்லக்கூடிய கருத்துதான். ஆனாலும் ஒவ்வொரு மொழிக்கும் சில இலக்கண/இலக்கிய வரைமுறைகள் உள்ளன. சமஸ்க்ருத மொழி சொற்கள் தமிழிலே வந்து ஆளப்படுவதற்கு, இலக்கண நூல்களிலேயே அனுமதிக்கப்பட்ட விதிகள் உண்டு.
பதிலளிநீக்குதொல்காப்பியம், எல்லோராரும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஆதி (ஸமஸ்க்ருதச் சொல் தமிழ் வழக்கிலே வந்ததற்கு இதுவே எடுத்துக்காட்டு) இலக்கண நூல்.
நான் “முதல்” என்ற சொல்லை எடுத்தாளாமல், “ஆதி” யை எடுத்துக் கொண்ட காரணம், “ஆதவன்” என்ற சொல்லைச் சுட்டி, இது தமிழா அல்லது ஸமஸ்க்ருதமா என்ற கேள்வியை எழுப்பத்தான். ஆதியிலேயே இருந்தவன், முதலிலிருந்தே இருப்பவன் என்ற பொருளின் பகலவனைக் குறிக்கும் சொல்தான் இது. ஆதவன் முழுக்க முழுக்க தமிழ் வார்த்தை என்பதை சங்க இலக்கியப் பாடல்களே நிச்சயப்படுத்துக்கின்றன. ஆனால், ‘ஆதி” யோ ஸமஸ்க்ருதச் சொல்தான். திருவள்ளுவனின் முதல் குறளிலேயே “ஆதி”, “பகவன்” என்ற ஸமஸ்க்ருதச் சொற்கள் வருவதை கவனிக்க.
பிற மொழிச் சொற்களை நம் மொழிக்கு எடுத்து ஆளும் போது, சில விதிகள் உள்ளன. (மறுபடியும் தொல்காப்பியத்திலே எடுத்துக்காட்டுகள் உள்ளன) அந்த விதிகளுக்கு முரண்பட்டு சொற்கள் கலக்கும் போது மொழி அத்து மீறப்படுகிறது. ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், ஒரு வீட்டிலே அழகை மேம்படுத்தக் கூடிய பொருள்களையும் வைக்கலாம். அல்லது வீட்டின் எழிலைக் குலைக்கக் கூடிய (அவை கலைப்பொருட்களாகவே இருந்தாலும் கூட) பொருள்களையும் வைக்கலாம். இரண்டாவது வகை வீட்டின் ஒட்டுமொத்த எழிலுக்கு அத்துமீறல்.
ஆனால் பார்வைகள் பலவிதம். சில பார்வைகளுக்கு குப்பையும் கொள்ளை அழகாக இருக்கலாம்.
சொல்அகராதி (டிக்ஷனரி) எல்லோரும் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆங்கில அகராதி இல்லாத வீடு உண்டா? தமிழிலே சீரிய அகராதிகள் இல்லை என்பது உண்மை. இருக்கும் அகராதிகளும், சரியாக நெறிப்படுத்தப்படவில்லை, வரிசைப்படுத்தப்படவில்லை. கதிரைவேற்பிள்ளை அகராதி என்பது சைவசித்தாந்த கழகத்தாரால் 1911ம் வருடம் முதலில் வெளியிடப்பட்ட ஒன்று. மிகப்பெரிய முயற்சி. தமிழ் படிப்பவர்கள் எல்லோரும், சொற்களின் மூலங்களினையும், எடுத்தாளும் முறை, இடம் இவற்றை அறிந்துகொண்டாலே மொழி தானாகவே வளர்ந்துவிடும்.
மொழி வளர்ச்சியைப் பற்றி சரியாகப் பேசினால் மொழி வளர்ந்துவிடாது. மொழியைச் சரியாகப் பேசினால் மட்டுமே மொழி வளரும்.
மக்கள் தொலைகாட்சி (தொலைக் காட்சி என்பது கூட தவறான தமிழாக்கம் தான்!) ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்தி வருகிறது, “தமிழ் பேசு, தங்கக்காசு” என்று. இந்த நிகழ்சியின் வாயிலாக நமக்கே ஒரு விழிப்பு ஏற்படுவது உண்மை. எந்த அளவுக்கு, நாம் பிறமொழிச் சொற்களுக்கு அடிமைப்பட்டுவிட்டோம் என்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது. பாமரர் முதல் கொண்டு, படித்தவர்கள் வரை அவரவர் படிப்புக்கு ஏற்றார் போல, ஒரே தங்க்லீஷ் மயம்தான்.
சுஜாதா ஒரு நல்ல சிந்தனையாளர், பயன்படுகிற வழியிலே முற்போக்கு சிந்தனைகளை கொண்டவர். ரதி, உன்னுடைய நண்பரின் முயற்சி நிச்சயமாகப் பாராட்டத்தக்கதே! வாய்ப்பு தானாக வாய்காது, முயற்சித்தால் கட்டாயம் வாய்க்கும்.
தமிழ் இலக்கணம் பற்றிய ஒரு பதிவின் தொடர்பை உனக்கு அனுப்பியுள்ளேன். நல்ல வேளை ஆங்கிலத்திலே தான்…! படித்து மகிழ்!!
http://kalappal.blogspot.com/2007/05/date-of-tholkappiyam-part-3.html
வணக்கம்
பதிலளிநீக்குWelcome – Pl. visit – kalappal.blogspot.com
A Blogger for Ancient Tamil
தமிழ் - ஆர்வலர்களுக்கும் ; ஆய்வாளர்களுக்கும்