यस्या वाटी हृदयकमलं कौसुमी योगभाजां
यस्याः पीठी सततशिशिरा शीकरैर्माकरन्दैः ।
यस्याः पेटी श्रुतिपरिचलन्मौलिरत्नस्य काञ्ची
सा मे सोमाभरणमहिषी साधयेत्काङ्क्षितानि ॥ ७७॥
யஸ்யா வாடீ ஹ்ருʼத³ய கமலம் கௌஸுமீ யோக³பா⁴ஜாம்
யஸ்யா: பீடீ² ஸததஶிஶிரா ஶீகரைர் மாகரந்தை:³ ।
யஸ்யா: பேடீ ஶ்ருதிபரிசலன் மௌலிரத்னஸ்ய காஞ்சீ
ஸா மே ஸோமாப⁴ரண மஹிஷீ ஸாத⁴யேத் காங்க்ஷிதானி ॥ 77॥
எவள் யோகிகளின்
இதயத்தாமரைப் பூந்தோட்டம் கொண்டாளோ, எவள் எப்போதும் தேன்பெருக்கால் குளிர்ந்த பங்கஜாசனம்
கொண்டாளோ,
எவள் வேதங்களின்
முடிமணியாக உள்ளாளோ, எவள் காஞ்சியைத் தன் பெட்டகமாகக் கொண்டாளோ, மதியணி ஈசன் மனையாம்
அவள் என்னுடைய இட்டங்களை நிறைவு செய்யட்டுமே
எவள்யோகி யர்தம் இதயாம்பு யப்பொழில்
ஏற்றவளோ,
எவளென்றும் தேனோத ஈரகற் காசனம் ஏற்றவளோ,
எவள்வேத சூடிகை என்பதோ, காஞ்சியை
ஏற்றகாவோ,
அவள்மதி சூடி அரன்மனை, என்னாசை ஆர்க்கயின்றே!
பொழில்-பூந்தோட்டம்;
ஓதம்-பெருக்கு; ஈர-குளிர்ச்சி; கற்கம்-தாமரை; சூடிகை-மணிமுடி; கா-பெட்டகம்; அரன்மனை-ஈசன்
மனைவி; ஆர்க்க-நிறைவு செய்க.
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
எவள் யோகியர்தம்
இதயாம்புயப் பொழில் ஏற்றவளோ, எவள் என்றும் தேன் ஓத ஈர கற்க ஆசனம் ஏற்றவளோ, எவள் வேத
சூடிகை என்பதோ, காஞ்சியை ஏற்ற காவோ, அவள், மதிசூடி அரன் மனை, என்னாசை ஆர்க்கயின்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam