श्रीकामाक्षि तव स्मितैन्दवमहःपूरे परिस्फूर्जति
प्रौढां वारिधिचातुरीं कलयते भक्तात्मनां प्रातिभम् ।
दौर्गत्यप्रसरास्तमःपटलिकासाधर्म्यमाबिभ्रते
*किं किं कैरवसाहचर्यपदवीरितयां न धत्ते परम् ॥ ९२॥
ஸ்ரீகாமாக்ஷி! தவ ஸ்மிதைந்த³வ மஹ: பூரே பரிஸ்பூ²ர்ஜதி
ப்ரௌடா⁴ம் வாரிதி⁴ சாதுரீம் கலயதே ப⁴க்தாத்மநாம் ப்ராதிப⁴ம் ।
தௌ³ர்க³த்ய ப்ரஸராஸ் தம: படலிகா ஸாத⁴ர்ம்யமாபி³ப்⁴ரதே
*கிம் கிம் கைரவ ஸாஹசர்ய பத³வீ ரீத்யாம் ந த⁴த்தே பரம் ॥ 92॥
सर्वं/ஸர்வம் என்றும் பாடம்.
“ஸர்வம் கைரவ ஸாஹசர்ய பதவீரிதிம் விதத்தே பரம்” என்றும் கடைசிவரி பாடம் உண்டு. அதாவது, “மற்றதெல்லாம் ஆம்பலுக்கு ஒத்துழைக்கும்
தன்மையை ஏற்கிறது” என்றாகும்
ஸ்ரீகாமாக்ஷி
உன் புன்னகையாம் நிலவின் ஒளிப்பெருக்கு நன்கு ஒளி வீசுகையில், அடியார்களின் மேன்மையும் ஆழ்கடலின் திறனை அடைகிறது. கேடுகளின்
பரவல் இருள் கூட்டத்தின் நிலைமையை அடைகின்றன. மற்ற நன்மைகளில் எவையெவைதான் ஆம்பல் மலருக்கு
துணையான நிலையை அடைவதில்லை?
நின்மென் நகையாம் நிலவொளி கூட்டு நிலவுமிடம்
உன்னன்பர் மேன்மையும் ஓதத் திறனை உறுகிறதே!
இன்னல் பரவல் இருட்கூட்டென் றாகும்; எவையெவைதாம்
நன்மையில் ஆம்பல் நகைத்துணை, காமாட்சி நன்குறுதே!
மேன்மையும்-மேதைமை/பேரறிவு; ஓதம்-கடல்; நகை-மலர்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
நின் மென்நகையாம் நிலவொளி கூட்டு நிலவுமிடம், உன்னன்பர் மேன்மையும் ஓதத் திறனை உறுகிறதே! இன்னல் பரவல் இருட்கூட்டு
என்றாகும்; எவையெவைதாம், நன்மையில் ஆம்பல் நகைத்
துணை, காமாட்சி நன்குறுதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam