ஏப்ரல் 30, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 21

सरसवचसां वीची नीचीभवन्मधुमाधुरी
भरितभुवना कीर्तिर्मूर्तिर्मनोभवजित्वरी
जननि मनसो योग्यं भोग्यं नृणां तव जायते
कथमिव विना काञ्चीभूषे कटाक्षतरङ्गितम् २१॥

ஸரஸவசஸாம் வீசீ நீசீபவன்மதுமாதுரீ
ரிதபுவனா கீர்திர்மூர்த்தி: மனோபவ ஜித்வரீ
ஜனனி மனஸோ யோக்³யம் போக்³யம் ந்ருʼணாம் தவ ஜாயதே
கத²மிவ வினா காஞ்சீபூஷே கடாக்ஷதரங்கி³தம் 21

காஞ்சி நகருக்கணியாகும் தாயே! உனது கடாக்ஷ அலைத் தொடர்பின்றி, மனிதருக்கு தேனின் இனிமையைத் தாழ்த்தும் சுவையுள்ள மொழியழகும், உலகளாவிய கீர்த்தியும், மன்மதனை வெல்லும் மேனியழகும், மனதிற்கு விருப்பமான போக அனுபவங்களும் எவ்வாறு கிடைக்கும்?

காஞ்சிக் கணிதாயுன் கண்கடை வங்கக் களனிலாமல்
தீஞ்சுவைத் தேனுந்தீம் தேய மனிதர்க்குத் தேமொழியின்
ஐஞ்ஞையும் பூமிநீள் அஞ்சும் அனங்கனின் அங்கமேனி
மாஞ்சிலும், போக மனப்பற்றும் எங்கனம் மாந்துவமே?

வங்க-அலை; களன்-தொடர்பு; தீம்-இனிமை; தேய-தாழ்ந்து குறைய; ஐஞ்சை-அழகு; அஞ்சு-கீர்த்தி; அனங்கன்-மன்மதன்; மாஞ்சில்-பெருமை; மனப்பற்று-விருப்பம்; மாந்து-அனுபவி; போக-சுகங்கள்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


காஞ்சிக்கு அணி, தாய் உன் கண்கடை வங்கக் களனிலாமல், தீஞ்சுவைத் தேனுந் தீம் தேய மனிதர்க்குத் தேமொழியின், ஐஞ்ஞையும் பூமி நீள் அஞ்சும் அனங்கனின் அங்கமேனி மாஞ்சிலும், போக மனப்பற்றும் எங்கனம் மாந்துவமே?

ஏப்ரல் 29, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 20

कलकलरणत्काञ्ची काञ्चीविभूषणमालिका
कचभरलसच्चन्द्रा चन्द्रावतंससधर्मिणी
कविकुलगिर: श्रावंश्रावं मिलत्पुलकांकुरा
विरचितशिरःकम्पा कम्पातटे जगदम्बिका २०॥

கலகலரணத் காஞ்சீ காஞ்சீ விபூஷண மாலிகா
கசபர லஸச்சந்த்³ரா சந்த்³ராவதம்ஸ ஸதர்மிணீ
கவிகுல கி³: ஶ்ராவம் ஶ்ராவம் மிலத்புலகாம்குரா
விரசிதஶிர: கம்பா கம்பாதடே ஜக³³பி³கா 20

परिशोभते/பரிஶோபதே என்றும் பாடமுண்டு.

ஒலிக்கும் ஒட்டியாணமுடையவளும்,  காஞ்சிக்கு அணியாம் மாலை போன்றவளும், கூந்தலில் விளங்கு சந்திரனை உடையவளும், சந்திரனை சிரத்தில் தரித்த பரம சிவன் மனையாளும், கவிகுலத்தின் கவிச்சொற்களைக் கேட்டுக் கேட்டு, மயிர்கூச்செடுத்தவளும், சிரக்கம்பம் (தலையாட்டிக் கொண்டு) செய்துகொண்டும் உலகன்னை கம்பைத் தடத்தில் விளங்குகிறாள்.

கலிக்கின்ற காஞ்சியள், காஞ்சியின் மாலையள், கார்முகிற்கூந்
தலின்மீதில் திங்கள் தரித்தாள், கலையணிந் தார்மனையாள்,
புலவோர் கவிக்குப் புளகம் அடைந்து, புனிதகம்பை
மலிநீர் தடத்தில், வரைப்பன்னை கம்மாட மாந்துவளே!

கலித்தல்-ஓலித்தல்; காஞ்சி-இடையாபரணம், காமாக்ஷியின் நகரம்; கார்முகில்-கருமேகம்; திங்கள்-சந்திரன்; கலை-பிறை; புலவோர்- கவிகுலம்; புளகம்-மயிர்கூச்சு; வரைப்பு-உலகு; கம்மாட-கம்+ஆட-தலையாடுமாறு (சிரக்கம்பம்); மாந்துதல்- இரசித்து அனுபவித்தல்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

கலிக்கின்ற காஞ்சியள், காஞ்சியின் மாலையள், கார்முகிற் கூந்தலின் மீதில் திங்கள் தரித்தாள், கலையணிந்தார் மனையாள், புலவோர் கவிக்குப் புளகம் அடைந்து, புனிதகம்பை மலிநீர் தடத்தில், வரைப்பன்னை கம்மாட மாந்துவளே!

ஏப்ரல் 28, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 19

कालिन्दीजलकान्तयः स्मितरुचिस्वर्वाहिनीपाथसि
प्रौढध्वान्तरुचः स्फुटाधरमहोलौहित्यसन्ध्योदये
मणिक्योपलकुण्डलांशुशिखिनि व्यामिश्रधूमश्रियः
कल्याणैकभुवः कटाक्षसुषमाः कामाक्षि राजन्ति ते १९॥

காலிந்தீ³ ஜல காந்தய: ஸ்மிதருசி ஸ்வர்வாஹினீ பாத²ஸி
ப்ரௌடத்வாந்த ருச: ஸ்பு²டாதர மஹோலௌஹித்ய ஸந்த்யோத³யே
மணிக்யோபல குண்ட³லாம்ஶுஶிகி²னி வ்யாமிஶ்ர தூமஶ்ரிய:
கல்யாணைக பு: கடாக்ஷ ஸுஷமா: காமாக்ஷி ராஜந்தி தே 19

காமாக்ஷி! உன் மங்களமுள்ள கடைக்கண் காந்திகள், மென்னகை ஒளியாம் சுவர்க்க கங்கை வெள்ளத்தில் கலந்த யமுனையின் அழகைப்போலவும், மாலை நேர செம்மைப்போலாம் உதட்டழகோடு சேரும் கருத்த இருளொளி போன்றும், மாணிக்க குண்டலவொளி போன்றாம் தீவொளியின் புகைக்கூட்டம்போலவும் விளங்குகின்றன.

உங்கட் கடாட்ச ஒளிசுபம், காமாட்சி, ஒண்நகையாம்
கங்கைப் பெருக்கில் கலந்திடு காளிந்தி காந்தியைப்போல்
மங்குமா லைசெம்மை வாய்க்கரை சேர்கரு வாளிருள்போல்
செங்கற் குழையொளி தீப்புகைக் கூட்டம்போல் சீருறுதே!

கடாட்சம்- கடைக்கண்; சுபம்-மங்களம்; ஒண்நகை- ஒளிநகை; காளிந்தி-யமுனை; மங்குமாலை-சாயுங்காலம்; வாய்க்கரை-உதடு; வாள்-ஒளி; செங்கல்-மாணிக்கம்; குழை-குண்டலம்; சீர்-இயல்பு, புகழ்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


உங்கட் கடாட்ச ஒளி சுபம், காமாட்சி, ஒண்நகையாம், கங்கைப் பெருக்கில் கலந்திடு காளிந்தி காந்தியைப்போல், மங்கு மாலை செம்மை வாய்க்கரை சேர் கரு வாள் இருள்போல், செங்கற் குழையொளி தீப்புகைக் கூட்டம்போல் சீருறுதே!

ஏப்ரல் 27, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 18

यस्मिन्नम्ब भवत्कटाक्षरजनी मन्देऽपि मन्दस्मित-
ज्योत्स्नासंस्नपिता भवत्यभिमुखी तं प्रत्यहो देहिनम्
द्रक्षामाक्षिकमाधुरीमदभरव्रीडाकरी वैखरी
कामाक्षि स्वयमातनोत्यभिसृतिं वामेक्षणेव क्षणम् १८॥

யஸ்மின்னம்ப³! வத் கடாக்ஷ ரஜனீ மந்தே³பி மந்த³ஸ்மித-
ஜ்யோத்ஸ்னா ஸம்ஸ்னபிதா வத்யபிமுகீ² தம் ப்ரத்யஹோ தே³ஹினம்
த்³ரக்ஷாமாக்ஷிக மாதுரீ மத³ர வ்ரீடா³கரீ வைக²ரீ
காமாக்ஷி ஸ்வயமாதனோத்யபிஸ்ருʼதிம் வாமேக்ஷணேவ க்ஷணம் 18

தாயே! காமாக்ஷி! மென்னகையாம் நிலா நிறைந்த உனது கடைக்கண்ணாம் இரவானது, எந்த மூடன் மேல் படுமோ, அவனுக்கு இனிமையால் கருவம் கொண்ட திராட்சை, தேன் போற்றவற்றின் இனிமைச் செருக்கை அடக்கும் வாக்கின் வலிமை தானாகக் கணத்தில் காதல்வயப்பட்ட பெண்ணைப்போல் ஏற்படுமே!

மென்னகைச் சந்திரன் மேவுன் கடைக்கண் விபாவரியெப்
பன்னாடை யின்மேற் படுமோ, திராட்சை, பவித்திரத்தின்
இன்சுவை தற்கினை இற்றுச்செய் சொல்வலி ஏறிகணம்
தன்னில்கா தற்கொள்பெண் தானாவன் காமாட்சி தாயவளே!

மேவு-நிறை; விபாவரி- கருமிரவு; பன்னாடை-மூடன்; பவித்திரம்-தேன்; தற்கு-செருக்கு;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மென்னகைச் சந்திரன் மேவுன் கடைக்கண் விபாவரி, எப் பன்னாடையின்மேற் படுமோ, திராட்சை, பவித்திரத்தின் இன்சுவை தற்கினை இற்றுச் செய் சொல் வலி, ஏறி கணம் தன்னில் காதற்கொள் பெண் தானாவன் காமாட்சி தாயவளே!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...