आकर्षन्नयनानि नाकिसदसां शैत्येन संस्तम्भय-
न्निन्दुं किंच विमोहयन्पशुपतिं विश्वार्तिमुच्चाटयन् ।
हिंसत्संसृतिडम्बरं तव शिवे हासाह्वयो मान्त्रिकः
श्रीकामाक्षि मदार्तितापतमसो
विद्वेषणे चेष्टताम् ॥ ९०॥
ஆகர்ஷன் நயனானி நாகிஸத³ஸாம் ஶைத்யேன ஸம்ஸ்தம்ப⁴ய-
ந்னிந்து³ம் கிம்ச விமோஹயன் பஶுபதிம் விஶ்வார்திமுச்சாடயன் ।
ஹிம்ஸத் ஸம்ஸ்ருʼதிட³ம்ப³ரம் தவ ஶிவே! ஹாஸாஹ்வயோ மாந்த்ரிக:
ஸ்ரீகாமாக்ஷி மதார்துதாபதமஸோ வித்³வேஷணே சேஷ்டதாம் ॥ 90॥
मदीयमानसतमो/மதீ³யமானஸதமோ என்றும் பாடம் - என்மனதிலிருக்கும் இருளொடு பகைப்பதில் என்று பொருள்.
மங்களமே! ஸ்ரீகாமாக்ஷி!
விண்ணோர் சபையினர் கண்களை ஈர்த்து, தண்மையால் சந்திரனும் உறையச் செய்து, பரமேசுவரனையும்
மோகம் கொள்ளச் செய்து, உலகின் துயரை விரட்டி, வாழ்வெனும் வெப்பை துன்புறுத்திச் செய்யும்
உன் புன்சிரிப்பெனும் மாந்திரிகன் என்னுடைய துயர், தாபம், அறியாமை இவற்றிலும் வெறுப்புற்று
நீக்குவதில் ஈடுபடட்டுமே!
விண்சபை யோர்தம் விழிகளை ஈர்த்து மிகிரனயும்
தண்ணால் உறைத்து தகாபர மேசர்க்கும் தந்துதுயர்
மண்ணில் விரட்டியிவ் வாழ்துன்பை துன்புசெய் மாந்த்ரிகனுன்
வண்ணந கையால வையென்னில் காமாட்சி மாற்றுகவே!
விண்சபையோர்-தேவர்;
மிகிரன்-சந்திரன்;தண்-குளிர்ச்சி; தகா-மோகம்; மண்-உலகு; மாற்றுக-நீக்கிச் சிறப்பு செய்தல்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
விண் சபையோர் தம்
விழிகளை ஈர்த்து மிகிரனையும், தண்ணால் உறைத்து, தகா பரமேசர்க்கும் தந்து, துயர் மண்ணில்
விரட்டி, இவ்வாழ்துன்பை துன்பு செய் மாந்த்ரிகன் உன் வண்ண நகையால் அவை என்னில் காமாட்சி
மாற்றுகவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam