क्षेपीयः क्षपयन्तु कल्मषभयान्यस्माकमल्पस्मित-
ज्योतिर्मण्डलचंक्रमास्तव शिवे कामाक्षि रोचिष्णवः ।
पीडाकर्मठकर्मघर्मसमयव्यापारतापानल-
श्रीपाता: नवहर्षवर्षणसुधास्रोतस्विनीशीकराः ॥ ९१॥
க்ஷேபீய: க்ஷபயந்து கல்மஷப⁴யான்யஸ்மாகமல்பஸ்மித-
ஜ்யோதிர்மண்ட³லசம்க்ரமாஸ் தவ ஶிவே! காமாக்ஷி! ரோசிஷ்ணவ: ।
பீடா³கர்மட²கர்மக⁴ர்ம ஸமய வ்யாபார தாபானல-
ஸ்ரீபாதா: நவ ஹர்ஷ வர்ஷண ஸுதா⁴ஸ்ரோதஸ்வினீ ஶீகரா: ॥ 91॥
மங்கள உருவே
காமாக்ஷி! துயரத்தை விளைவிக்கும் கருமங்கள் என்னும்
கோடையன்ன தாபமாம் அனலுக்கு அழிவை செய்கின்றவைளாம், புதுப்பொழிவால் களிப்புற செய்யும்
அமுத நதியின் நீர்த்துளிகளாம் இருக்கும், உனது இளநகையின் ஒளிக்கூட்டத்தின் நடமாட்டம்,
வெகு விரைவில் எமது பாவ அச்சங்களை அழிக்கவேண்டும்!
துயரம் விளைவிக்கும் தொல்லைக் கருமத்தின் துன்பனலாம்
அயர்வளி கோடை அழித்துப் புதுமழை ஆங்குமகிழ்
வயஞ்செய் அமுதநீர் வாரிவிந் தாமுன் மயக்குநகை
வயக்கின்சஞ் சாரமெம் மாசச்சம் காமாட்சி மாய்க்கசிவே!
துன்பனல்-துன்ப அனல்; அயர்வு-சோர்வு;
வயம்-உரிமையாக்கும்; வாரி-அருவி; விந்து-துளி, வயக்கு-ஒளி; சஞ்சாரம்-நடமாட்டம்; மாசு-பாவம்;
மாய்க்க-அழிக்கட்டும்; சிவே-மங்களமே!
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
துயரம் விளைவிக்கும் தொல்லைக்
கருமத்தின் துன்ப அனலாம், அயர்வளி கோடை அழித்துப் புதுமழை ஆங்கு மகிழ்வயஞ் செய் அமுதநீர்
வாரி விந்தாம் உன் மயக்கு நகை வயக்கின் சஞ்சாரம் எம் மாசு அச்சம் காமாட்சி மாய்க்க
சிவே!