धानुष्काग्रसरस्य लोलकुटिलभ्रूलेखया बिभ्रतो
लीलालोकशिलीमुखं नववयस्साम्राज्यलक्ष्मीपुषः ।
जेतुं मन्मथमर्दिनं जननि ते कामाक्षि हासाङुरो
वल्गुर्विभ्रमभूभृतो वितनुते सेनापतिप्रक्रियाम् ॥ ५७॥
தா⁴னுஷ்காக்³ர ஸரஸ்ய லோல குடில ப்⁴ரூ லேக²யா பி³ப்⁴ரதோ
லீலாலோக ஶிலீமுக²ம் நவ வயஸ்ஸாம்ராஜ்ய லக்ஷ்மீபுஷ: ।
ஜேதும் மன்மத² மர்தி³னம் ஜனனி தே காமாக்ஷி ஹாஸ்ஸாங்குரோ
வல்கு³ர் விப்⁴ரம பூ⁴ப்⁴ருʼதோ விதனுதே ஸேனாபதி ப்ரக்ரியாம் ॥ 57॥
அன்னையே! காமாக்ஷி! வில்லாளிகளில் முதல்வனும், அசையும் வளைந்த புருவக்கொடியால்,
அழகிய விளையாட்டுப் பார்வை என்னும் அம்பைத் தொடுப்பவனும், இளமையின் அரசாட்சி அடைந்தவனுமான
“சேட்டை” என்னும் அரசனுக்கு, உன் புன்முறுவல், மன்மதனை வென்றாரை வெல்ல படைத்தலைவன்
செயலைச் செய்கின்றது!
வில்லோரில் முன்னின்றான், வில்லாய் அசைகூன் வியன்நுதலால்
வல்லதாம் வண்ணப்பார் வையம்பை எய்வானாம், வாலிபமாம்
நல்லர சாட்சியை நள்ளும்சேட் டைகோக்குன் நன்நகைதாம்
வில்லியை, காமாட்சீ, வெல்தானை நாதனாய் வீறுறுமே!
வில்லோர்-வில்லாளி;
கூன்-வளை; நுதல்-புருவம்; வண்ணம்-அழகு; வாலிபம்-இளமை;
நள்ளும்-அடையும்; கோ-அரசன்; வில்லி-மன்மதன்; வீறு-வெற்றி.
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)
வில்லோரில் முன்னின்றான்,
வில்லாய் அசை கூன் வியன் நுதலால் வல்லதாம் வண்ணப் பார்வை அம்பை எய்வானாம், வாலிபமாம்
நல்லரசாட்சியை நள்ளும் சேட்டை கோக்கு உன் நன் நகைதாம் வில்லியை, காமாட்சீ, வெல்தானை
நாதனாய் வீறுறுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam