ஜனவரி 26, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 27

बिभ्राणा शरदभ्रविभ्रमदशां विद्योतमानाप्यसो
कामाक्षि स्मितमञ्जरी किरति ते कारुण्यधारारसम्
आश्चर्यं शिशिरीकरोति जगतीमालोक्य चैनामहो
कामं खेलति नीलकण्ठहृदयं कौतूहलान्दोलितम् २७॥

பி³ப்ராணா ஶரத³ ப்ரவிப்ரமத³ஶாம் வித்³யோதமானாப்யஸோ
காமாக்ஷி ஸ்மிதமஞ்ஜரீ கிரதி தே காருண்யதாரா ரஸம்
ஆஶ்சர்யம் ஶிஶிரீகரோதி ஜக³தீமாலோக்ய சைநாமஹோ
காமம் கே²லதி நீலகண்ட² ஹ்ருʼ³யம் கௌதூஹலாந்தோ³லிதம் 27

காமாக்ஷீ! உனது இப்புன்னகைப் பூங்கொத்து, சரத்கால மேகத்தின் அழகு நிலையடைந்து விளங்கினாலும், கருணை மழை பொழிவது விந்தையன்றே! உலகையும் குளிர்விக்கிறது; இதைக்கண்ட நீலகண்டனாம் மயிலும் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவும் வியப்பே!

பூந்துண ராமுனிப் புன்னகை, கார்காலப் பூமுகிலில்
நீந்தும் அழகின் நிலையுற்றும், தண்ணளி நீர்ப்பெயலு
மீந்துபூ வைத்தண் மிகும்நீல கண்டன் மிககளிப்புள்
மாந்தநன் காடும்கா மாட்சீ!விந் தையது, மாவியப்பே!

பூந்துணர்- பூங்கொத்து; பூ-அழகு, உலகு; தண்ணளி-கருணை; நீர்ப்பெயல்-மழை; ஈந்து-அளித்து; தண்-குளிர்; மிகும்-செய்யும்; நீலகண்டன்-சிவன்; மயில்; உள்-உள்ளம்;

பொருள் விளங்கப் படிக்குமாறு:


பூந்துணராம் உன் இப்புன்னகை, கார்கால பூமுகிலில் நீந்தும் அழகின் நிலையுற்றும், தண்ணளி நீர்ப்பெயலும் ஈந்து பூவைத் தண் மிகும்; நீலகண்டன் மிககளிப்பு உள்மாந்த நன்காடும் காமாட்சீ! விந்தையது, மாவியப்பே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...