அக்டோபர் 28, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 39

धृतच्छायं नित्यं सरसिरुहमैत्रीपरिचितं
निधानं दीप्तीनां निखिलजगतां बोधजनकम्
मुमुक्षूणां मार्गप्रथनपटु कामाक्षि पदवीं
पदं ते पातङ्गीं परिकलयते पर्वतसुते ३९॥

த்ருதச்சா²யம் நித்யம் ஸரஸிருஹமைத்ரீபரிசிதம்
நிதானம் தீ³ப்தீநாம் நிகி²லஜக³தாம் போ³ஜனகம்
முமுக்ஷூணாம் மார்க³ப்ரத²னபடு காமாக்ஷி பத³வீம்
பத³ம் தே பாதங்கீ³ம் பரிகலயதே பர்வதஸுதே 39

மலைமகளே, காமாக்ஷீ! எப்போதும் சூரியனின் மனையாளான சாயையோடு கூடியதாயும், தாமரைகளின் நட்பை அடைந்ததாயும், ஒளிக்குக் காரணமாயும், உலகனைத்திற்கும் ஞானத்தைத் தருவதாகவும், முத்தியை நாடுவோர்க்கு தக்க வழியைக் காட்டுவதில் திறமையுள்ள உன் திருவடிகள் சூரியனின் தன்மை பெற்றதாக இருக்கின்றன.

மலைமகள் காமாட்சீ! மாலியின் சாயை மணத்ததாய்நீர்
சலசத்தின் நட்புற்ற தாயொளிக் கேதுவாய், தாலமிதில்
வலவ றிவளிக்க வல்லதாய், முத்தி வழிவிழைந்தால்
நலவழி காட்டிட ஞாயிறு போன்றாம்நின் நற்பதமே!


மாலி-சூரியன்; மணத்தல்-கூடுதல்; நீர்சலசம்-தாமரை; ஏது-காரணம்; தாலம்-உலகம்; வலவறிவு-வலிய ஞானம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...