அக்டோபர் 31, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 42

मरुद्भिः संसेव्या सततमपि चाञ्चल्यरहिता
सदारुण्यं यान्ती परिणतिदरिद्राणसुषमा
गुणोत्कर्षान्माञ्जीरककलकलैस्तर्जनपटुः
प्रवालं कामाक्ष्याः परिहसति पादाब्जयुगली ४२॥

மருத்³பி: ஸம்ஸேவ்யா ஸததமபி சாஞ்சல்ய ரஹிதா
ஸதா³ருண்யம் யாந்தீ பரிணதி த³ரித்³ராண ஸுஷமா
கு³ணோத்கர்ஷான் மாஞ்ஜீர ககலகலைஸ்தர்ஜன படு:
ப்ரவாலம் காமாக்ஷ்யா: பரிஹஸதி பாதா³ப்³ஜ யுக³லீ 42

காமாக்ஷீயின் பாதாம்புயங்கள், காற்றின் தேவதைகளால் சேவை செய்யப்பட்டவை; அசையாத்தன்மை உடைத்தன; எப்போதும் செந்நிறம் பூத்தவை; மாறுதலில்லா ஏழ்மையடைந்த காந்தியுடையவை (மாற்றமில்லா அழகுடையவை); தங்களிடமிருந்து (தண்டைகளால்) வெளிவரும் கலீர் கலீர் எனும் ஒலிகொண்டு உசும்பக் கூடியன; இக்குணங்களால், இவை செந்துளிர்களையும் ஏளனம் செய்யக்கூடியனவாகவுள்ளன.

அம்மையின் திருவடிகள் தளிர்களைப் போன்றே அழகும், செம்மையும் கொண்டு, காற்றிலசைபவை; ஆனால் அவற்றின் செம்மையும், அழகும் குறைந்தழிபவை; அவை காற்றால் அலைகழிக்கப்படும்; எல்லாவற்றிலும் செந்துளிர்களை விட சிறந்தவையாதலின் அம்மையின் பாதாம்புயங்கள் அவற்றை பகடி செய்கின்றன.

அம்மைகா மாட்சியின் அம்புயப் பாதங்கள் ஆசுகத்தார்
தம்சேவை கொண்டவை; தாமசை யா;என்றும் தங்கிடுமாம்
செம்மையும் பூத்தவை; செவ்வியும் மாறா; சிலம்பொலிகள்

தம்மால் அதட்டும்; தளிர்களை ஏளனம் தாம்செயுமே!

ஆசுகத்தார் - காற்று தேவதைகள்; செம்மை-செந்நிறம்; செவ்வி-அழகு; 

அக்டோபர் 30, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 41

प्रचण्डार्तिक्षोभप्रमथनकृते प्रातिभसरित्
प्रवाहप्रोद्दण्डीकरणजलदाय प्रणमताम्
प्रदीपाय प्रौढे भवतमसि कामाक्षि चरण-
प्रसादौन्मुख्याय स्पृहयति जनोऽयं जननि ते ४१॥

ப்ரசண்டா³ர்தி க்ஷோபப்ரமத²னக்ருʼதே ப்ராதிபஸரித்-
ப்ரவாஹ ப்ரோத்³³ண்டீ³ கரண ஜலதா³ய ப்ரணமதாம்
ப்ரதீ³பாய ப்ரௌடேவ தமஸி காமாக்ஷி சரண-
ப்ரஸாதௌ³ன் முக்²யாய ஸ்ப்ருʼஹயதி ஜனோயம் ஜனனி தே 41

தாயே, காமாக்ஷீ! தொழுபவர்தம் கொடுந்துயரத்தின் கலக்கத்தை அழிக்க வல்லவையும், அறிவாற்றல் என்னும் ஆற்றின் வெள்ளத்தை மிகச் செய்யும் மேகம் போன்றதும், பிறந்திறக்கும் இருளில் ஒளியுமான உன் திருவடிகளின் அருளை நான் அடைய விரும்புகிறேன்.

தொழுவோர், கொடும்துயர் தூண்டும் கலக்கம், தொலைக்கவல்ல,
விழுமிய ஒட்ப மெனுமாற்றை வெள்ளஞ்செய் மேகமான,
உழல்பவ அல்லில் உதிக்கும் ஒளியாமுன் ஒண்கழல்கள்
தொழுமருள், தாயே! துயக்கமே, காமாட்சீ! தோன்றிடுதே!  


தொழுவோர்-வணங்குவோர்; கலக்கம்-மனக்குமுறல்; விழுமிய-சிறந்த; ஒட்பம்-அறிவு; தொழுவதல்; உழல்பவ-அலைக்குமிவ் வாழ்வு; அல்-இருட்டு; துயக்கம்-பந்தம்/ஆசை;

அக்டோபர் 29, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 40

शनैस्तीर्त्वा मोहाम्बुधिमथ समारोढुमनसः
क्रमात्कैवल्याख्यां सुकृतिसुलभां सौधवलभीम्
लभन्ते निःश्रेणीमिव झटिति कामाक्षि चरणं
पुरश्चर्याभिस्ते पुरमथनसीमन्तिनि जनाः ४०॥

னைஸ்தீர்த்வா மோஹாம்பு³திமத² ஸமாரோடுமனஸ:
க்ரமாத்கைவல்யாக்²யாம் ஸுக்ருதிஸுலபாம் ஸௌதவலபீம்
லபந்தே நி:்ரேணீமிவ சடிதி காமாக்ஷி சரணம்
புர்சர்யாபிஸ்தே புரமத²னஸீமந்தினி ஜனா: 40

திரிபுரமெரித்தோன் தேவி! காமாக்ஷீ! பையப் பைய இச்சைக்கடலைத் தாண்டி, பின்னர், புண்ணியம் செய்தவர்களால் எளிதில் பெறக்கூடிய முத்தியெனும் மேன்மாடத்தை முறையோடு ஏற விரும்பும் மக்கள், ஏணிபோன்றதாம் உன் திருவடியை பலவிதமாய் வழிபட்டு விரைவில் அடைகிறார்கள்

திரிபுரம் தீய்த்தார்தம் தேவியே! காமாட் சிமெல்லமெல்ல
கருதற் கடலைத் கடந்துநற் புண்ணியர் கைகொளுமாம்
திரமெனும் மேன்மாடம் செல்லாற்றைக் ஆர்வும், செகத்தவருன்
திருப்பாத ஏணி திறம்ப லதுதித்துச் சேர்விரைந்தே!

தீய்த்தார் - எரித்தார்; கருதல்-விழைவு,இச்சை; திரம்-முத்தி; செல்லாறு- செல்லும் வழி; ஆர்வு-விழைதல்; திறம்பல-பல வழிகளில்

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...