अत्यन्तचञ्चलमकृत्रिममञ्जनं किं
झङ्कारभङ्गिरहिता किमु भृङ्गमाला ।
धूमाङ्कुरः किमु हुताशनस ङ्गहीनः
कामाक्षि नेत्ररुचि नीलिम कन्दळी ते ॥83॥
அத்யந்த சஞ்சலம க்ருத்ரிமமஞ்ஜனம் கிம்
ஜம்கார பங்கி ரஹிதா கிமு ப்ருங்கமாலா |
தூமாங்குர: கிமு ஹுதாஶன ஸங்கஹீன:
காமாக்ஷி நேத்ரருசி நீலிம கந்தளீ தே ||83||
ஹே! காமாக்ஷீ! உன் கண்களின் காந்தியான
கருமை நிறமானது, மிக அலைபாய்வது! அது பிறரால் செய்யப்படாத மையோ? ரீங்காரமிடாத வண்டுகளின்
வரிசையோ? நெருப்பின் தொடர்பில்லாமல் வரும் கரும்புகையின் கூட்டமோ? எதுவென்று அறியேனே!
கருமை நிறமாமுன் கண்ணதன் காந்தி கவித்தனத்து!
அரும்விழிக் குப்பிறர் ஆக்காத அஞ்சனம் ஆமதுவோ!
வருணரீங் காரமில் வண்டுகள் கூடிய மாலிகையோ!
நெருப்பற் றபுகை நிகரமா! காமாட்சீ நின்விழியே!
கவித்தனம்-சஞ்சலம்;
மாலிகை-வரிசை; நிகரம் = கூட்டம்; வருணம்-சுர ஓசை
அருமையான தமிழ், அழகான சுருக்கமான விளக்கம்
பதிலளிநீக்கு