செப்டம்பர் 29, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 10

रजःसंसर्गेऽपि स्थितमरजसामेव हृदये
परं रक्तत्वेन स्थितमपि विरक्तैकश सुलभं।
अलभ्यं मन्दानां दधदपि सदा मन्दगतितां
विधत्ते कामाक्ष्याः चरणयुगमाश्चर्यलहरीम् ॥ १०॥

ரஜ:ஸம்ஸர்கே³பி ஸ்தி²தமரஜஸாமேவ ஹ்ருʼ³யே
பரம் ரக்தத்வேன ஸ்தி²தமபி விரக்தைகரணம்
அலப்யம் மந்தா³நாம் ³³பி ஸதா³ மந்த³³திதாம்
விதத்தே காமாக்ஷ்யா: சரணயுக³மா்சர்யலஹரீம் 10

காமாக்ஷியின் இரு திருவடிகளும், இரசத்தின் (புழுதி) தொடர்பிருப்பினும், இரசோ குணம் இல்லாதார் மனதில்மட்டும் இருப்பதாகவும், சிவந்த (ரக்த) நிறத்தோடிருப்பினும், விரக்தியுடையார்க்கே எளிதானதாகவும், (மந்தகதி) உடைத்ததாயினும், மந்த மதியினருக்கு பெறமுடியாததாகவும், வியப்பெனும் அலைகளை எழுப்புகிறதே! இப்பாடலில் ஸ்ரீமூகர் “ரஜஸ்”, “ரக்த”, “மந்தம்” என்னும் சமஸ்க்ருத பதங்களின் இருவேறு துருவங்களைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளவிதமே வியப்பானது. இரசோகுணம் என்பது விழைவு, பெருமை என்னும் குணங்களைக் குறிப்பன. காமாக்ஷியின் பாதங்களுக்கு இவ்விரண்டு குணங்களும் உண்டு; ஆயினும் அவை, அக்குணங்கள் இல்லாத ஞானியார்க்கே கிடைக்கும்.! இரசம் என்பது புழுதியென்பது இரசோ குணமாகிய விரும்பப்படும், பெருமை மிக்க பாதங்கள் என்பதற்கும் பொருந்தும்.

இரசத் தொடர்பில் இருந்து மிலாருளம் ஏகுவதும்,
இரத்த நிறத்தில் இருந்தும் விரத்தர்க்(கு) எளியதுமாம்,
உரமெ லிநடை உடைத்தும் மயல்மதி உள்ளவர்க்கு
அரிதாம்கா மாட்சீ அடிச்சீர்கள் விந்தை அலைகளன்றே!


இரசம்-புழுதி; ஏகுவது-இருப்பது; விரத்தர்-விரக்தியுடையார்; உரமெலி-மந்தகதி; மயல்-மந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...