क्रान्तेन मन्मथ मदेन विमोह्यमान-
स्वान्तेन चूततरुमूलगतस्य पुंसः ।
कान्तेन किञ्चिदवलोकय लोचनस्य
प्रान्तेन मां जननि काञ्चिपुरीविभूषे ॥80॥
க்ரான்தேன மன்மததேன விமோஹ்யமான-
ஸ்வான்தேன சூததரு மூலகதஸ்ய பும்ஸ: |
காந்தேன கிஞ்சிதவலோகய லோசனஸ்ய
ப்ராந்தேன மாம் ஜனனி காஞ்சிபுரீ
விபூஷே
||80||
காஞ்சீ நகருக்கு அணியாக இருக்கும் காமாக்ஷியே!
ஒற்றை மாமரத்தடியில் உறைபவருடைய சேர்க்கையால் ஏற்பட்ட மன்மதனுடைய விளையாட்டின் வேகத்தால்
ஏற்பட்ட ஆசை கூடியதும், அழகுள்ளதுமாம் உன்கடைக் கண்ணால் என்னை சிறிதாவது காண்பாயாக.
ஒருமா தருகீழ் உறைபவர்
சேர்க்கையால் உற்றதுவாம்
உருவிலி கேளியின் ஓட்டத்தில்
உண்டாய உச்சுவலம்
பெருகி அழகினைப் பெற்ற
கடைக்கண்ணால் பிந்தளவும்,
கருணையில் காஞ்சிக் கணியாய
காமாட்சீ காண்குவையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam