ஆகஸ்ட் 31, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 82

नीलोत्पलप्रसवकान्तिनिर्दशनेन
कारुण्यविभ्रमजुषा तव वीक्षितेन
कामाक्षि कर्मजलधेः कलशीसुतेन
पाशत्रयाद्वयममी परिमोचनीयाः 82

நீலோத்பல ப்ரஸவ காந்தி நிதர்னேன
காருண்ய விப்ரமஜுஷா தவ வீக்ஷிதேன |
காமாக்ஷி கர்மஜலதே: கலஶீஸுதேன
பாத்ரயாத் வயமமீ பரிமோசனீயா: ||82||

காமாக்ஷீ! கருநெய்தல் மலரின் ஒளிக்கு ஒப்பானதும், கருணையின் அழகினால் நிறைந்ததும், வினைக்கடலுக்கு அகத்தியர்போன்றதுமாம், உனது கடைக்கண் பார்வையால் நாங்கள் மூன்று பாசங்களிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்!

கருநெய்தல் பூவதன் காந்திக்கு ஒப்பாம், கருணையது
பெருகி நிறைந்ததால் பேரழ கும்கூடப் பெற்றதுவாம்,
கருமக் கடலுக் ககத்தியர் போலாம்நின் கண்கடையால்
அருள்ககா மாட்சீ அழிந்துமுப் பாசமும் அற்றிடவே!

கருநெய்தல் - நீலோத்பலம்; கருமக்கடல்-வினைக்கடல்

ஆகஸ்ட் 30, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 81

कामाक्षि कोऽपि सुजनास्त्वदपाङ्गसङ्गे
कण्ठेन कन्दळितकाळिमसम्प्रदायाः
उत्तंसकल्पितचकोरकुटुम्बपोषा
नक्तन्दिवप्रसवभूनयना भवन्ति 81
காமாக்ஷி கோபி ஸுஜனாஸ்த்வதபாங்க ஸங்கே
கண்டேன கன்தளித காளிம ஸம்ப்ரதாயா: |
உத்தம்ஸகல்பித சகோர குடும்பபோஷா
நக்தன்திவ ப்ரஸவபூ நயனா பவந்தி ||81||

ஹே காமாக்ஷி! சில புண்ணியர்கள் உனது பார்வையின் தொடர்பின் மகிமையால், கழுத்தில் கருநீலமடைகிறார்கள்; தலையணியாகச் சகோரப் பறவைகளின் குடியை காப்போனான, சந்திரனை தரிக்கிறார்கள்; இரவு, பகல்களை உண்டு பண்ணக்கூடிய கண்களை உடைத்திருக்கிறார்கள்; அம்பிகையின் கடைக்கண் அருளைப் பெற்ற பரமசிவனை இப்பாடல் வருணிக்கிறது.

நின்பார்வை சார்ச்சியின் நீர்மையால் கண்டத்தில் நீலமதும்,
சென்னியில் பூணென சேர்ந்த, சகோரம தின்குடிக்கு
இன்காப் பெனவாகும் இந்தையும், நாள்நிசி என்றுசெய
தன்கண் களும்,சுகிர் தர்சிலர், காமாட்சீ! தாம்பெறுமே!


சார்ச்சி - தொடர்புல்- நீர்மை-சிறந்த குணம்; கண்டம்-கழுத்து; சென்னி-தலை; பூண்- அணி; இந்து-சந்திரன்; சுகிர்தர்-புண்ணியர்

ஆகஸ்ட் 29, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 80

क्रान्तेन मन्मथ म​देन विमोह्यमान-
स्वान्तेन चूततरुमूलगतस्य पुंसः
कान्तेन किञ्चिदवलोकय लोचनस्य
प्रान्तेन मां जननि काञ्चिपुरीविभूषे 80

க்ரான்தேன மன்மததேன விமோஹ்யமான-
ஸ்வான்தேன சூததரு மூலகதஸ்ய பும்ஸ: |
காந்தேன கிஞ்சிதவலோகய லோசனஸ்ய
ப்ராந்தேன மாம் ஜனனி காஞ்சிபுரீ விபூஷே ||80||

காஞ்சீ நகருக்கு அணியாக இருக்கும் காமாக்ஷியே! ஒற்றை மாமரத்தடியில் உறைபவருடைய சேர்க்கையால் ஏற்பட்ட மன்மதனுடைய விளையாட்டின் வேகத்தால் ஏற்பட்ட ஆசை கூடியதும், அழகுள்ளதுமாம் உன்கடைக் கண்ணால் என்னை சிறிதாவது காண்பாயாக.

ஒருமா தருகீழ் உறைபவர் சேர்க்கையால் உற்றதுவாம்
உருவிலி கேளியின் ஓட்டத்தில் உண்டாய உச்சுவலம்
பெருகி அழகினைப் பெற்ற கடைக்கண்ணால் பிந்தளவும்,
கருணையில் காஞ்சிக் கணியாய காமாட்சீ காண்குவையே!

ஒருமா-ஏகாம்ரம்; உருவிலி-மன்மதன்; கேளி-விளையாட்டு; ஓட்டம்-வேகம்; உச்சுவலம்-ஆசை; பிந்து-துளி;

ஆகஸ்ட் 28, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 79

कालाञ्जनप्रतिभटं कमनीयकान्त्या
कन्दर्पतन्त्रकलया कलितानुभावम्
काञ्चीविहाररसिके कलुषार्तिचोरं
कल्लोलयस्व मयि ते करुणाकटाक्षम् 79

காலாஞ்ஜன ப்ரதிபடம் கமனீய காந்த்யா
கந்தர்ப தந்த்ரகலயா கலிதானுபாவம் |
காஞ்சீ விஹார ரஸிகே கலுஷார்தி சோரம்
கல்லோலயஸ்வ மயி தே கருணாகடாக்ஷம் ||79||

காஞ்சீயில் விளையாட விரும்புபவளே! தன்னுடைய ஒளியால் கருமையான கண்மைக்கு ஒப்பாயதும், காமனுடைய கலையின் சாத்திர அறிவினால் உண்டாகும் உணர்ச்சி வெளிப்பாடு கொண்டதும், பாவங்களால் தோன்றும் துன்பங்களை போக்குவதுமான உன் கருணை மிக்கக் கடைக்கண் பார்வை ஒளி என்மீது அலைபோல் பாயச் செய்வாயாக!

கருமைக்கண் மைக்குத்தன் காந்தியில் ஒப்பதும் காமனவன்
அருங்கலை வேத அறிவின் உணர்ச்சி அடங்கியதும்
கருவினை சேர்க்கும் கலிநீக்கும் நின்கடைக் கண்ணதனால்
கருணை யொளியைக் கனிகாஞ் சியிலே களிப்பவளே


காந்தி-ஒளி; கருவினை-தீவினை; கலி-துன்பம்

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...