कैवल्यदाय करुणारसकिङ्कराय
कामाक्षि कन्दलितविभ्रमशङ्कराय ।
आलोकनाय तव भक्तशिवङ्कराय
मातर्नमोஉस्तु परतन्त्रितशङ्कराय ॥47॥
கைவல்யதாய கருணாரஸ கிம்கராய
காமாக்ஷி கந்தளித விப்ரம ஶம்கராய |
ஆலோகனாய தவ பக்த ஶிவம்கராய
மாதர் நமோऽஸ்து பரதந்த்ரித
ஶம்கராய ||47||
தாயே! காமாக்ஷி! முக்தி அளிப்பதும், கருணையமுதை
தன் பணியாளராகக் கொண்டதும், சங்கரருக்கு மோகலீலையை மிகச்செய்வதும், அன்பருக்கு மங்களத்தைச்
செய்வதும், பரமசிவனைப் தன்வயமாகுவதுமாம் உன்னுடைய பார்வைக்கு வணக்கங்கள்!
காமாட்சீ! தாயே கனியும் நெறியாமுன் கண்கடைகள்
காமாரிக் கேமோ கமிகச் செயுமாம்; கருணையூற்றை
தாமே வலராய் தனக்குறும்; மங்கலம் தந்திடுமாம்;
சோமரை தன்வயத் துற்றதை சேவிப்பேன் சோதியளே
நெறி - முக்தி;
காமாரி - சிவன்; ஏவலர்- பணியாள்; சோமன்-சிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam