ஜூன் 30, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 20

माहात्म्यशेवधिरसौ तव दुर्विलङ्घ्य-
संसारविन्ध्यगिरिकुण्ठनकेलिचुञ्चुः
धैर्याम्बुधिं पशुपतेश्चुलकीकरोति
कामाक्षि वीक्षणविजृम्भणकुम्भजन्मा 20

மாஹாத்ம்ய ஶேவதிரஸௌ தவ துர்விலங்க்ய-
ஸம்ஸார விந்த்யகிரி குண்டன கேலிசுஞ்சு: |
தைர்யாம்புதிம் ஶுபதேஶ்சுலகீ கரோதி
காமாக்ஷி வீக்ஷண விஜ்ரும்பணகும்பஜன்மா ||20||

ஹே காமாக்ஷி, மகத்துவம் நிறைந்த உன்னுடய கடைக்கண் வீச்சாம் கும்பமுனி, கடப்பதற்கரிய விந்திய மலையினைக்கு கருவத்தை அடக்கும் விளையாட்டை வேடிக்கையாக நிகழ்த்தியவர்; பசுபதியாம் இறைவனின் தீரமாம் கடலை உள்ளங்கையளவு நீராகச் செய்தவர்.

மகத்து நிறைநின் மலர்க்கடைக் கண்வீச்சாம் மாமுனிவர்
அகத்தியர், விந்தியத்தின் ஆண வம்கொய்யும் ஆட்டமதை
நிகழ்த்திப், பசுபதி நெஞ்சுர மாகடல் நீர்முழுதும்
அகங்கை யதனில் அடக்கினார், காமாட்சீ! அற்புதமே

அகங்கை - உள்ளங்கை; ஆட்டம்- விளையாட்டு; கொய்யும்-நீக்கும்/அடக்கும்; 

ஜூன் 29, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 19

श्रीकामकोटि शिवलोचनशोषितस्य
शृङ्गारबीजविभवस्य पुनःप्ररोहे
प्रेमाम्भसार्द्रमचिरात्प्रचुरेण शङ्के
केदारमम्ब तव केवलदृष्टिपातम् 19

ஸ்ரீகாமகோடி ஶிவலோசன ஶோஷிதஸ்ய
ஶ்ருங்கார பீஜ விபவஸ்ய புன: ப்ரரோஹே |
ப்ரேமாம்பஸார்த்ரம் அசிராத் ப்ரசுரேண ங்கே
கேதாரம் அம்ப தவ கேவல த்ருஷ்டிபாதம் ||19||

ஸ்ரீகாமகோடி தாயே! சிவனுடைய நெற்றி நெருப்பினால் கருகிய காதலாம் சிறந்த வித்தை மீண்டும் துளிர்த்து விளவிக்க, அன்பெனும் நீரால், உன்னுடைய கடைக்கண்ணருளே நல்வயலாகின்றென்று நினைக்கிறேன்.

திருகாம கோடீ! சிவன்நெற்றிச் தீச்சுட்டுத் தீய்ந்திடினும்
சிருங்கார வித்தை, திருவாய் துளிர்த்திடத் தேற்றுதற்கு
பரிவெனும் நீரால்நின் பார்க்கும் கடைக்கண் பயிர்நிலமாய்
உருவாகிற் றென்றே உணர்ந்துளில் தாயே, உவந்தனனே

ஜூன் 28, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 18

कुण्ठीकरोतु विपदं मम कुञ्चितभ्रू-
चापाञ्चितः श्रितविदेहभवानुरागः
रक्षोपकारमनिशं जनयञ्जगत्यां
कामाक्षि राम इव ते करुणाकटाक्षः 18

குண்டீ கரோது விபதம் மம குஞ்சித ப்ரூ-
சாபாஞ்சித: ஶ்ரிதவிதேஹ பவானுராக: |
ரக்ஷோபகாரமனிம் ஜனயஞ்ஜகத்யாம்
காமாக்ஷி ராம இவ தே கருணாகடாக்ஷ: ||18||

ஹே! காமாக்ஷி! உன்னுடைய கருணைமிக்க கடைக்கண்ணானது, ஸ்ரீராமன் கையிலுள்ளதுபோல், வளைந்த புருவங்களாகிற வில்லையுடையதாயும், தன்னை அண்டியுள்ள மன்மதனிடத்தில் (வைதேகி) எப்போதும் அன்பு பூண்டும், எப்போதும், உலகை இரட்சிப்பது/இராக்கதர்களுக்கு தண்டிப்பது என்பவற்றை செய்வதாயும் விளங்குகிறது. அவை எனக்கு விளையும் இடர்களை நீக்கட்டும். வைதேகியாம் சீதையையும் - உடலிழந்த மன்மதனையும் (விதேஹபவா என்ற சொல்லால்), உலகை இரட்சிப்பது/அவுணரை தண்டிப்பது (ரக்ஷோபகாரம்) என்று, இப்பாடலில் சிலேடையாகச் சொல்லியிருக்கும் நயம் அழகானது! அவுணரைத் தண்டிப்பதே உலகை இரட்சிக்கத்தான்!

கருணை குழையுன் கடைவிழி காகுத்தன் கையுளபோல்
புருவம் குழைந்து புனைந்த தனுவேந்தும்; பூணுமன்பை,
விரும்பியே அண்டும் விதேகிக்கு; வீழ்த்துமாம் வீணவுணர்;
ஒருக்க அவையான் உறுமிடர் போக்கட்டும் ஓடிடவே


குழை - நெகிழ், வளை; தனு-வில்; விதேகி- வைதேகி; தேகம் விட்டவன் (மன்மதன்); ஒருக்க-எப்போதும்; காகுத்தன் - இராமன்

ஜூன் 27, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 17

कामद्रुहो हृदययन्त्रणजागरूका
कामाक्षि चञ्चलदृगञ्चलमेखला ते
आश्चर्यमम्ब भजतां झटिति स्वकीय-
सम्पर्क एव विधुनोति समस्तबन्धान् 17

காமத்ருஹோ ஹ்ருதயயன்த்ரணஜாகரூகா
காமாக்ஷி சஞ்சலத்ருகஞ்சலமேகலா தே |
ஶ்சர்யமம்ப பஜதாம் ஜடிதி ஸ்வகீய-
ஸம்பர்க ஏவ விதுனோதி ஸமஸ்தபன்தான் ||17||

காமாக்ஷி தாயே! காமனின் எதிரியாம் சிவனின் உள்ளத்தை கட்டுவதில் விழிப்புடன் இருக்கும் நூற்கயிறாம் உனது அலையும் கடைகண் பார்வையே, உன்னை வணங்குபவர்களின் வாழ்க்கைப் பிடிப்புகளாம் கட்டுக்களை விரைவாக நீக்கிவிடுகிறதே! இது விந்தையன்றோ? [கடந்த சில ஸ்லோகங்களில், காமாக்ஷியின் பார்வையை, அலைகின்ற கண்களாகக் மூககவிக் குறிப்பிடுவது ஏனென்று சிந்தித்தால், அன்னையின் அருட்பார்வை அனைத்துயிர்களைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பார்வையென்பதனால் என்று புரியும்]

காமாட்சீ அன்னையே காமனின் வைரியாம் கண்ணுதலோன்
காமாரி உள்ளத்தைக் கட்டும் கயிராகக் கண்விழிப்பாய்
தாமலை யுன்றன் தயைக்கண் கடைக்குத் தலைவணங்க
பூமாயக் கட்டெலாம் போம்விந்தை என்னே! புகலுவனே


பூமாய - பூவுலகின் மாய

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...