ஶ்ரீ மூகர், காஞ்சி காமகோடி பீடத்தின் 20 ஆண்டுகள் (கி.பி 398 - கி.பி 437) வரை ஆச்சாரியராக இருந்தவர். பிறவி ஊமையும் செவிடுமாக இருந்த ஶ்ரீ மூகர் அம்பாளின் தாம்பூலப் பிரசாதத்தால் கவியும், ஜகத்குருவுமானார். வைத்ய எஸ்.வீ ராதாக்ருஷ்ண ஸாஸ்திரிகள் எழுதிய தமிழ் உரை புத்தகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய சென்னை மயிலை அகத்திலிருந்து கொண்டு வந்தேன். இப்போதுதான் படிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. படிக்கும்போதே இக்கவியின் வடமொழி வாக்கமுதை தமிழிலே கட்டளைக்கலித்துறையாக எழுதினால் என்ன என்று தோன்றியது. இது அவளிட்ட கட்டளையோ என்னவோ, அறியேன். ஆனால் தொடங்கிவிட்டேன். முடிப்பது அவள் செயல், கருணை..
कारणपरचिद्रूपा काञ्चीपुरसीम्नि कामपीठगता ।
काचन विहरति करुणा काश्मीरस्तबककोमलाङ्गलता ॥1॥
காரண பரசித்ரூபா காஞ்சீபுரஸீம்நி காமபீடகதா |
காசன விஹரதி கருணா காச்மீர ஸ்தபக் கோமளாங்கலதா
|| (1)
காஞ்சி எல்லையினுள், காமபீடத்தில் அமர்ந்தவளாகக், காச்மீரத்துப் குங்குமப்பூங்கொத்து போன்ற மேனி நிறமும், கொடிபோன்று துவள்கின்ற மென்மைமிக்க அவயங்களும் உள்ளவளாக, உலகமனைத்திற்கும் ஆதி காரணமூலப் பொருளான, உலகிற்கு அப்பாற்பட்ட, மேம்பட்ட சித்வடிவினளாக, கருணையே உருவான ஒருவள் விளையாடுகிறாள்.
அண்டாதி காரணி அஃதும் கடந்து அகண்டசித்தாம்
விண்டற் கரிய விளையாட் டுடையாள் வியக்குமருள்
கண்ணாள்காஞ் சீநகர் காமாட்சி! காச்மீரக் குங்குமப்பூ
உண்பொன் உடலாள் உயர்காம பீடம் உறைபவளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam