டிசம்பர் 14, 2015

குறளின் குரல் - 1334

14th Dec, 2015



ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் 

கூடலில் தோன்றிய உப்பு.

                            (குறள் 1328: ஊடலுவகை அதிகாரம்)

ஊடிப் பெறுகுவம் கொல்லோ - ஊடுவதால் நாம் பெறுவோம் அல்லவோ
நுதல் வெயர்ப்பக் 
- நெற்றி வேர்க்கும்படியாக
கூடலில் தோன்றிய - கூடி முயங்குவதில் தோன்றுகின்ற
உப்பு - உப்பென்பது சுவையும், அது தரும் இன்பமும்

வேர்க்கும்படியாக கூடி முயங்குவதில் நாம் பெறும் சுவையும், இன்பமும், ஊடுவதால் நாம் மேலும் பெறுவோம் அல்லவா? எவ்வாறு?. இனிப்பு ஒரு சுவைதான். அதன் சுவை பலமடங்காக மிக்குக்காணப்படும், எதிர்மாறாக காரத்தையோ, கசப்பையோ முதலில் உண்டிருந்தால். அதேபோல், ஊடுவதால், பின்பு கிடைக்கும் கூடலில் சுவை மிக்கது என்று கூறப்படுகிறது.


“அமைத் தோளாய்நின் மெய்வாழ் உப்பின் விலைஎய் யாமென” என்று கூடலின் கண் தோன்றிய   உப்பை பற்றி அகநானூற்று (390:10-11) வரிகள் கூறும்

Transliteration:

UDip peRUguvam koLLO nudalveyarppak
kUDalil thOnRiya uppu

UDip peRUguvam koLLO – In love-quarrel, won’t we get?
Nudal veyarppak – for the forhead to sweat
kUDalil thOnRiya – that which appeared in love making
uppu – the taste that is pleasurable

Won’t the lovers get more pleasure than the long, forheads-sweating, physical union in their love-quarrel also? The rhetorical question is to imply the answr “yes”. How? Sweetness is desirable taste; but it tastes even better after eating something hot or sour; likewise, the physical union, after the love-quarrel is even more pleasurable, is what VaLLuvar alludes here.

“More than the forehead sweating physical union
  Isn’t love-quarrel more of a pleasurable reunion?

இன்றெனது குறள்:

நெற்றிவேர்க்கக் கூடியதால் தோன்றுமின்பம் ஊடுவதால்
பெற்றிடலாம் மீண்டுமன் றோ?

neRRivErkkak kUDiyadAl thONRuminbam UDuvadAl
peRRiDalAm mINDuman RO?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...