9th Dec, 2015
புலத்தலின்
புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந்
தன்னார் அகத்து.
(குறள் 1323:
ஊடலுவகை அதிகாரம்)
புலத்தலின் - ஊடலின்
புத்தேள் நாடு உண்டோ - மேலாக வானோர் உலகும் ஆமோ?
நிலத்தொடு நீர் இயைந்து - நிலத்தோடு
நீரும் ஒன்றோடு ஒன்று இயைந்து இருப்பதுபோல்
அன்னார் அகத்து - என்னோடு பிணைந்து இருப்பவரிடத்து
நிலமும்
நீரும் இணைந்து ஒன்றோடொன்று கலந்தார்போல் அன்புடைய என் காதலரோடு கொள்ளும் ஊடலைவிட வானோர்
உலகமும் மேலாமோ? என்று காதலி தம் தோழியிடம் வினவுகிறாளாம். காதற்தலைவி ஊடலுக்குப் பின்
வரும் கூடலின் பெரும் இன்பம் கருதி, அது வானோர் உலகில் வாழ்வதிலும் இன்பமானது என்ற
கருத்தில் இவ்வாறு கூறுகிறாள்.
Transliteration:
Pulattalin puttELnADu uNDO nilattoDu
nIriyain dannAr agattu
Pulattalin – more than the love-quarrel with my beloved
puttEL nADu uNDO – would the heavens be better?
nilattoDu nIr iyainda(u) – like how the earth and water are bonded,
annAr agattu – my lover who is in union with me
More than the love-quarrel with my
beloved who is in union with me, like how earth and water are, would even the
heavens be better? – the maiden asks her friend! She is referring to the
pleasure after the quarrel and says that it more pleasurable than celestial
heavens.
“More than the love-quarrel, would even heavens
be better?
with
beloved, whose union is like how the earth is with water”
இன்றெனது குறள்:
ஊடலின் மிக்கவானோர் நாடுண்டோ நன்னிலத்தைக்
கூடியநீர் போலியல்பா ரோடு
UDalin mikkavAnOr nADuNDO nannilattaik
kUDiyanIr pOliyalbA rODu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam