24th Nov, 2015
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
(குறள் 1308: புலவி அதிகாரம்)
நோதல் எவன் மற்று - நொந்து கொள்வது எதற்காக பின்பு?
நொந்தாரென்று - (நம்மால்) மனம் வருந்தியுள்ளாளே
என்று
அஃதறியும் - அதை அறியக்கூடிய
(அதற்கு ஆவன செய்யக்கூடிய)
காதலர் இல்லா வழி - காதலர் இல்லாதபோது.
நம்மால் இவள் மனம் வருந்தினாளே என்று அறிந்து
அதற்கான காரணத்தையும் அறிந்து, தீர்க்காதவராக காதலர் இருக்கையில், எதற்காக நொந்து கொள்ளவேண்டும்.
அதனால் என்ன பயன்? என்று காதலி நினைக்கிறாளாம் இக்குறளில்.
Transliteration:
nOdal evanmaRRu nondArenRu ahdaRiyum
kAdalar illA vazhi
nOdal evan maRRu –
What for should I even suffer
nondArenRu – that she is hurt
(because of me)
ahdaRiyum – to do the needful
to pacify that
kAdalar illA vazhi –
when my lover is not doing that!
When my lover is not feeling remorseful
that I am hurt and have suffered because of him and trying to amend by doing
appropriate remedial deed, why I should I even hurt?, asks maiden in this
verse. The hurt is not even worth it, when the opposite party cares less.
“When my lover does not even regret,
What use
is it to even feel the hurt?
இன்றெனது குறள்:
நொந்தாளே என்றுணர்வும் இல்லாத காதலர்க்காய்
நொந்தால்தான் என்ன பயன்?
nondALE enRuNarvum illAda kAdalarkkAi
nondAldAn enna payan?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam