நவம்பர் 10, 2015

குறளின் குரல் - 1300

10th Nov, 2015

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

                           (குறள் 1294: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

இனி அன்ன - இனிமேல் எது செய்யத்தக்கது என்பவற்றை
நின்னொடு - உன்னோடு
சூழ்வார் யார் - எண்ணப் போகிறவர் யார்?
நெஞ்சே - என் உள்ளமே
துனி செய்து - அவரோடு ஊடல் செய்து
துவ்வாய் காண் - பின்பு கூடுதலை செய்யமாட்டாய்
மற்று - பின்பு

உள்ளமே! நீ அவரைக்கண்டதும் உடனே கூட விழைந்து விரைகிறாயே அன்றி அவர் பிரிந்து சென்ற தவற்றுக்காக, அவரோடு ஓரளவாவது ஊடி பின்னர் கூடுவோமே என்று நினைகிறாயில்லை. உனக்கு இனிமேல் எது எவ்வாறு செய்யத்தக்கது என்று யார் எண்ணி கூறப்போகிறார். நான் கூறப்போவதில்லை, என்று நெஞ்சோடு ஊடுகிறாள் காதற்தலைவி.

Transliteration:

Inianna ninnoDu sUzhvAryAr nenjE
Tuniseidu tuvvAukAN maRRu

Ini anna – To decide what is right to do, from now on
ninnoDu – with you
sUzhvAr yAr – who is going to think?
nenjE – O! my heart!
Tuni seidu – you won’t even sulk
tuvvAu kAN – and then submit yourself to him
maRRu - after

O! my heart! The moment you see him, you hasten to go and be with him; you never admonish him for his mistake of leaving you in the first place, not even sulk a bit,  and then make up with your loving embrace; Who is going to advice you on these matters from now on? I am not going to anymore as your don’t take my advice!

Who will advice you from now on? I will not - O! my heart!
You make up with him, not even being upset with him a bit” 

இன்றெனது குறள்:

ஊடிப்பின் கூடுதற் குள்ளாத உள்ளமே
நாடிநான் சொல்வதுனக் கென்?

UDippin KUDudaR kuLLAda uLLamE
nADinAn solvadunak ken?

1 கருத்து:

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...