துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித்தொகை. 6 :10 – 11
இன்பமும் உண்டோ எமக்கு
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித்தொகை. 6 :10 – 11
நெடுந்தகாய் ! கடுமையான வழிகளைக் கடந்து பொருள் தேடச்செல்கிறாய் ; நும்முடைய துன்பத்திற்குத் துணையாக எம்மையும் இட்டுச் செல்வதை விட வேறோர் இன்பமும் எமக்கு உண்டோ ? – தலைவி.
அதாவது தலைவி தன் காதற்தலைவனிடம் இவ்வாறு சொல்லுவாளாம்..!
காட்டுவழி காதங்கள் நீகடந்து சென்றுபொருள்
ஈட்டும்நின் துன்பில் துணையாவேன் - வாட்டமின்றி
நாட்டமோ டென்னைநீ கூட்டிச்சென் றாலதனின்
ஈட்டுமின்ப முண்டோ எனக்கு?
ஈட்டும்நின் துன்பில் துணையாவேன் - வாட்டமின்றி
நாட்டமோ டென்னைநீ கூட்டிச்சென் றாலதனின்
ஈட்டுமின்ப முண்டோ எனக்கு?
அன்று அப்படித்தான் எதிர்ப்பார்த்தார்களோ என்னவோ!… ஆனால் இன்றைய காட்சியோ இப்படியன்றோ இருக்கிறது?
வீட்டிலே வெட்டியாக வீற்றிருக் காமல்நீ
மூட்டையைக் கட்டு முனைப்போடு - ஈட்டினால்
ஊட்டம் உனக்குண்டு உப்போடு அன்றிநான்
ஓட்டம்தான் உன்னையே விட்டு
மூட்டையைக் கட்டு முனைப்போடு - ஈட்டினால்
ஊட்டம் உனக்குண்டு உப்போடு அன்றிநான்
ஓட்டம்தான் உன்னையே விட்டு
அவர்கள் இப்படிச் செய்வதிலும் தவறில்லைதான்.. இல்லைன்னா பாதிப் பசங்க வெட்டியாய்தானே திரிவானுங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam